கன்னக் குழிவு கவின்கவிதை பாடுதே

தென்னையிளங் காற்றினில் துள்ளி விளையாடும்
கன்னங் கருங்கூந்தல் காதலைப் பாடுதோ
சின்ன இடையிளந் தென்னைபோல் ஆடுமோ
மின்னல் விழிநீலம் மென்பனி மார்கழியோ
கன்னக் குழிவு கவின்கவிதை பாடுதே
என்னவென்று சொல்வேன் எழில்

---- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (25-Dec-24, 10:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

மேலே