எதுவும்
அன்பென எதுவும் வேண்டாம்
பண்பென எதுவும் வேண்டாம்
பணமென எதுவும் வேண்டாம்
உறவென எதுவும் வேண்டாம்
கடனென எதுவும் வேண்டாம்
கனவென எதுவும் வேண்டாம்
நட்பென எதுவும் வேண்டாம்
காதலென எதுவும் வேண்டாம்
உணர்வென எதுவும் வேண்டாம்
உடலென எதுவும் வேண்டாம்
இலக்கென எதுவும் வேண்டாம்
இருப்பென எதுவும் வேண்டாம்
மாற்றமென எதுவும் வேண்டாம்
மகிழ்வென எதுவும் வேண்டாம்
வலியென எதுவும் வேண்டாம்
வாழ்வென எதுவும் வேண்டாம்
எனக்கென எதுவும் வேண்டாம்.
உனக்கென இருப்பதே யோகம்.
- காதலாரா