புதைந்து போகட்டும்
புதைந்து போகட்டும்..
11 / 07 / 2025
புதைந்து போகட்டும்..
என் மனச் சிறைக்குள்
புழுங்கிக் கொண்டிருக்கும்
என் மனச் சிதைவுகள்
வெளியில் சொல்லமுடியா
பல மர்ம முடிச்சுகள்
சிதம்பர ரகசியங்கள்..
நான் போட்ட முகமூடிகள்
எதிர்மறை எண்ணங்களின்
கோர முகங்கள்
ரத்த வாடை வீசும்
ஆறா ரணங்கள்
புன்னகைக்குள் மறைந்த
பூ நாக படங்கள்
விடம் நிறைந்த
பிளந்த இருநாவுகள்
அத்தனையும்
மண்ணோடு மண்ணாக
புதைந்து போகட்டும்.
உண்மை நின்று
கொல்லுமல்லவா?

