மூட நம்பிக்கை

சிந்திக்கும்
திறனிருந்தும்
படித்தவர்்
பலரும்
பாமர
மக்களும்
பார்வை
இருந்தும்
பயணிக்கும்
பாதை
சரியென
நினைத்து
முன்னோர் மீது
பழிகூறி
மூட நம்பிக்கையில்
மூழ்கி இருப்பது
விஞ்ஞான
உலகில் விந்தை !

விண்வெளியில்
மனிதன்
தங்கிடும்
அறிவியல்
காலத்தில்
இதை காணும்
போது சிரிக்க வைக்கிறது !

ஆராய்ச்சிக் கூடங்கள்
அவமானம் தாங்காமல்
தற்கொலை முடிவில் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Jul-25, 10:34 pm)
Tanglish : mooda nambikkai
பார்வை : 57

மேலே