செல்வன் ராஜன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செல்வன் ராஜன் |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 09-Apr-1961 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2022 |
பார்த்தவர்கள் | : 177 |
புள்ளி | : 35 |
மொழியால் தமிழன், உணர்வால் இந்தியன், இனத்தால் ஆசியன், எண்ணத்தால் இந்த உலகத்தின் ஒரு மானுடன் . யாதும் ஊரே !!! கேளிர்!!!
இந்த உலகம் பொருளையே அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. அதற்கு உயிர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒருவருடைய உள்வாங்கும் நிலையை பொருத்து அமைவதே!
உதாரணத்திற்கு ஒரு விந்து என்கிற பொருள் ஒரு முட்டை என்கிற மற்றெரு பொருளுடன் இணைந்து உலகில் ஒரு புதிய பொருளை உருவாக்குகிறது.
இது ஒரு இயற்கை நியதி.
அதாவது நாம் உண்ணும் உணவு ஒரு பொருள். மிருகங்கள் உண்ணும் ஒரு உணவு ஒரு பொருள்.தாவரங்கள் உண்ணும் உணவு ஒரு பொருள்.
தாவரங்கள் உணவை பூமியில் இருந்து பெறுகின்றன ; பிறகு அவையே மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உணவாகின்றன. மிருகங்கள் மற்ற மிருகங்களை பொருளாக உண்கின்றன.
ஆக உணவு ஒரு பொருள். உயிர் பற்றி
வானகம் வையகம் என்றும் இசைத்திட ;
என்னிடத்தில் உன்னை எடுத்தேன்;
ஏக்கம் எண்ணம் எனக்கு வந்தது;
எப்படி வந்தது எனக்கு தெரிந்தது;
பிறத்தல் ஒரு சனம் ;
இறத்தலும் ஒரு சனமே !!
இரு வினை பிறப்பு,
விட்டுச் செல்பவன் நீ!
எதிர் வினை இறப்பு,
எடுத்துக் கொள்பவன் நான் !
மாறும் மாயை உலகத்தில்
சாபத்தை ஒரு வரமாக,
வரவேற்று, வசந்தம் வீச,
சாதனம் வேண்டும் - அது தியாகமே!!
நம்மில் மலர வேண்டும் அது,
தினம் வளர வேண்டும்,
மனம் புரிதல் வேண்டும்,
புரிதலில் தெளிதல் வேண்டும்,
தெளிதலில் நிலைத்தல் வேண்டும்,
நிலைத்தலில் நின்றல் வேண்டும்,
நின்நிலை இறைநிலை அதுவே கண்டேனே!
நான் " மற்றும் என்னுடை " எண்ணம்"
இப்படிச் சொன்னால் 'எனக்கு புரியும் என்று நான் நினைக்கிறேன்'......
அதாவது" நான்" உயிருடன் இருக்கும் போது ' என்னை நானே' கொண்டாடிக் கொண்டு இருப்பது இல்லை.
அப்படி ஆனால் " நான் " இப்போது இறந்து பின் ஆவியாக பேசுகிறனா? நான் ஒன்றும் " P T சாமி" ( பிசாசு கதை எழுத்தாளர்) இல்லை.
இப்போதே விஷயத்துக்கு வருகிறேன்.
எவ்வளவுக்கு, எவ்வளவு நான் என்னை சுயநலமாக எண்ணி என்னைப் புரிந்து கொண்டு செயல்படுகிறேனோ !! அவ்வளவுக்கு, அவ்வளவு நான் பிறரைப் பற்றிய புரிதல் மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றில் தெளிந்து , சிந்தனையுடன் செயல்பட்டு ஒரு பொறுப்பு உள்ள குடி மகனாக வாழ பழகிக் கொள்ள முடியும்
எங்கள் வீட்டின் அருகே அரசலாறு பாய்ந்து ஓடுகிறது.
பாய்ந்து ஓடும் - காவேரியில் தண்ணீர் திறந்து விடும் போது; மற்ற நேரங்களில் சிறு சிறு ஓடையாய் தென்படும்.
நீர் ஓடைகள் நீர் திட்டுகளாக மாறும். பிறகு திட்டுகளில் மணல் சுரண்டப்பட்டு பள்ளமும், படுகுழியுமாகவும் காட்சி தரும்.
இது நடைமுறை நிகழ்வு.
இந்த நீர் திட்டுகளின் ஓரம் பாத்தி கட்டி , நாத்து நட்டு , நீர் பாட்சி , பயிரிட்டு சாகுபடியும் நிகழும்.
ஒரு புறம் காவேரி தாய் நெகிழியை சுமக்கிறாள் ; மறுபுறம் இருக்கும் வீடுகள், மருத்துவ மனைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் இருந்து வந்து சேரும் கழிவுகளும் காவேரியின் கிளை ஆறுகளை அலங்கரிக்கும் கண்ணீர் ப
வணக்கம். 400 கவிஞர்கள் நூலாசிரியர்களாக இணைந்து படைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த "கவிநானூறு" எனும் நூலினை 46 வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் வெளியிட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் அடுத்த முயற்சியாக 47 வது சென்னைப்புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் சனவரி 2024 ஆம் ஆண்டு வெளியிடும் நோக்கில் "ஐந்திணை ஐந்நூறு" எனும் மரபு நூலினை 500 கவிஞர்கள் இணைந்து படைக்க திட்டமிட்டுள்ளோம். குறிஞ்சியைப் பற்றி 100 பாவலர்களும், முல்லையைப் பற்றி 100 பாவலர்களும் , மருதம் பற்றி 100 பாவலர்களும், நெய்தல் பற்றி 100 பாவலர்களும், பாலையைப் பற்றி 100 பாவலர்களும் என ஐந்து திணைகளைப் பற்றியும்
காக்கை குருவி எங்கள் ஜாதி - பாரதியார்
ஐய பேரிகை ஐய பேரிகை கொட்டடா!
-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா!
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
(ஐயபேரிகை)
2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.
(...)