செ.பா.சிவராசன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : செ.பா.சிவராசன் |
இடம் | : மங்கலக்குன்று |
பிறந்த தேதி | : 15-Mar-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 1927 |
புள்ளி | : 87 |
www.vahai.myewebsite.com
கவிஞர்களுக்கு அழைப்பு : வணக்கம் : 402 கவிஞர்களும் ஆசிரியர்களாக இணைந்து "கவிவிசை" என்ற மின்னூலினை அழகிய வண்ணத்தில் இலவசமாக 2013 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். இதன் அடுத்த முயற்சியாக, சம காலத்தில் வாழும் கவிஞர்களையும்; அவர்களது கவி நயமான படைப்பையும் வெளிக்கொணரும் வகையில் "கவி நானூறு" என்ற கவிதை நூலினை சனவரி 2023-ல் நடைபெறவிருக்கும் 46 வது சென்னைப் புத்தகக்காட்சியில் வெளியிட கீதம் பதிப்பகம் முன் வந்துள்ளது. ஆகவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற தாங்கள (...)
கவிஞர்களுக்கு அழைப்பு : வணக்கம் : 402 கவிஞர்களும் ஆசிரியர்களாக இணைந்து "கவிவிசை" என்ற மின்னூலினை அழகிய வண்ணத்தில் இலவசமாக 2013 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். இதன் அடுத்த முயற்சியாக, சம காலத்தில் வாழும் கவிஞர்களையும்; அவர்களது கவி நயமான படைப்பையும் வெளிக்கொணரும் வகையில் "கவி நானூறு" என்ற கவிதை நூலினை சனவரி 2023-ல் நடைபெறவிருக்கும் 46 வது சென்னைப் புத்தகக்காட்சியில் வெளியிட கீதம் பதிப்பகம் முன் வந்துள்ளது. ஆகவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற தாங்கள (...)
பட்டாம் பூச்சி கூட்டிலே
பட்டினி கன்டதில்லை
மூச்சுப் பஞ்சம் முழுதாக
முகக் கவசம் அணிந்ததில்லை
நுண்ணுயிரி தாக்கும் பிணிகளில்
எதுவும் விதி முடித்ததில்லை
மீள முடியாத துன்பம்
மனிதா...! உனக்கு யார் தந்தது..?
அடர்காட்டின் ஆழத்தில்
அழகாய் வாழும் எந்த விலங்குக்கும்
வேற்றுமொழி இருமல் இல்லை
நுரையீரல் கொண்ட எவற்றுக்கும்,
சளி தொற்றிக் கொண்டதில்லை
சனி பார்க்கும் மனிதா...!
சளி உனக்குள் யார் இட்டது...?
இயற்கையோடு வாழும் எதுவுமே
செயற்கை சுவாசம் வாங்கியதில்லை
மரம் பிடித்து வாழ்வதெல்லாம்
மரணம் காண்பதில்லை
மாளிகையில் வாழும் மனிதா...!
உன் கட்டில்வரை மரணம்
உள்ளே யார் விட்டது..
இன்னிசை கீதம் பாடு
இனி வேண்டாம்
மதச் சாதி நாடு..!
இளைஞர்களே இந்தியர் வீடு
இயம்புவோம் இன்முகத்தோடு
சத்திய நெறி நித்திய ஒளி
தூய நெஞ்சில் பொதி
பூரண அமைதி
பூரித்துப் பொங்கும்
ஆர மலர்கள் பொறி
தந்திர படையில்
இயந்திர மடியில்
வெற்றி கொள்ளை முறி
விற்று விளையாடும்
வேற்று ஆட்சி பறி
மக்கள் வாழ்வை
தடங்கல் ஆக்கும்
சட்ட்ங்கள் ஓடி
கார்ப்பரேட் ஆட்சியே
கார்பன்டை ஆக்ஸைடு குடி
வளக்கொள்ளை ஆட்சி
வதம் செய்து முடிக்க
சுதந்திரம் பெற்றவளே..!
நிம்மதியாய் நீ இரு
இந்தியர் நாங்களுண்டு
நலிவுற விடுவோமா
சுரண்டும் ஆட்சியை
சுருட்டி எறிய மாட்டோமா
இரவல் மூச்சு
எங்களுக்கு தந்தவர்களே..!
சுதந்திர
ஈரக்குலை அறுக்க
EIA 2020 ஆயுதமெடுத்து
இந்திய பாராளுமன்றம்
பதுங்கி இருப்பவரே..!
இப் பிரபஞ்சம் கெஞ்சி
இரு நொடி அனுமதி வாங்கி
இந்தியா வந்திருக்கேன்
ஏறெடுத்துப் பாருமையா
ஏளனம்தான் செய்யாம
சுத்தி சுழலுற என்ன
சுருட்டி வைக்காதீக
அடர்த்திக் கிரகம் என்ன
அடித்து நொறுக்காதீக
ஓசோன் உண்ண
ஓநாய்களுக்கு பந்தி விரிக்காதீக
சமுத்திர சந்ததிகள
சாக்கடை ஆக்காதீக
சூரியன சுத்தி வரும் என்ன
சுட்டு பொசுக்காதீக
காடளிக்க காலனுக்கு
கடுதாசி இடாதீக
மலைச் சதைகள் பிய்க்க
மனு எழுதாதீக
பூதங்க அஞ்ச
புதைக்கப் பாக்காதீக
மூச்சுக்காற்று தொழிற்சாலைகள
முறிச்சி எறியாதீக
அணுக்களால ஆன எனக்கு
அணுக்கழிவு ஊட்டாதீக
உயிரிக்கு உயிர
7 வது உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு சென்னையில் பிரமாண்டமாக 3 நாட்கள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு நாட்டிலிருந்தும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அனைத்து தமிழ் அமைப்புகளின் ஆதரவோடும் இந்த மாநாட்டை திரைப்பட பாடலாசிரியர் சினேகன் அவர்களும் , உலகத் தமிழ் சங்கத்தின் மேனாள் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்களும் முன்னெடுக்கிறார்கள். மாநாடு சிறப்புற அமைய தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் இம் மாநாட்டிற்கான பணிகளைச் செய்து வருகிறது. இம் மாநாட்டில் வெளியிடவிருக்கும் நூலில் இணைவது மட்டுமின்றி மூன்று நாள் விழாவிலும் கலந்து கொண்டு மேடைக் கவியரங்கிலும் பங்கேற்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம்.
நண்பர்களே.. தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கமும் - தமிழ்ப்பணி அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மாபெரும் கவிதைப் போட்டி "தலை நகரில் தமிழ்த் திருவிழா" என்னும் பெயரில் 24-02-2019 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கங்களும்,வெள்ளிப் பதக்கங்களும்,விருதுகளும் வழங்கப்பட உள்ளன. கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் போட்டியில் கலந்து கொண்டு கவித்திறனை உலகறியச்செய்து ஓங்கு புகழடைய ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறேன். இந்த ஆண்டு முதல் இலக்கியத்திற்கான 'ஐந்திணை விருது' அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் கவிதை நூல் வெளியிட்டிருப்பின் நூல்களை அனுப்பி ஐந்திணை விருதுக்கு
மரம்...
மனிதர்களின் வாரிசு
மண்ணுக்கு சேவகன்
காற்று கடக்கும் சாலை
பறவைகளின் பள்ளிக்கூடம்
வானம்பார்த்து புன்னைக்கும் கன்னி
மேகவரம் வரும் தடம்
இயற்கையின் இனிய நாக்கு
காற்றுத் துறைமுகம்
கடவுள்களின் கூடாரம்
நிழல்களுக்கெல்லாம் தாய்
சூரியனை இயக்கும் பச்சைக் கொடி
மரம் போல் நிற்கும் மனிதா..!
மரத்தின் மனமாகு... கொடுக்க
பல்லுக்கு குச்சி
பசிக்கு கனி
வெயிலுக்கு இலை
வேர்வைக்கு காற்று
வேலிக்கு வேர்
உஞ்சலுக்கு கிளை
உறங்க கட்டில்
சுவாசிக்க வாயு
சேமிக்க நலம்
கரங்களை வெட்டினாலும்
தழைக்கும்
காயம் பல கொடுத்தாலும்
உயிர்க்கும்
முறித்து போட்டாலும்
நன்றி சொல்லும்
பௌர்ணமி நிலவை தற்செயலாய் பார்க்கையில் உன் சிரித்த முகம் தெரிந்தது...
தினமும் நிலவையும் நிலவில் உன்னையும் பார்ப்பதே அனுதின வழக்கமாகப் போனது...
மறையும் நிலவு நீ இருக்கும் தூரத்தை உணர்த்திற்று...
தேய்ந்த நிலவு உன் கோபத்தை நினைவூட்டியது...
முழுநிலவைக் காணும்போதெல்லாம் துள்ளி குதித்து மகிழ்ச்சியடைகிறேன்...
நிலவொளியில் உன் நினைவுகளோடு நான்...
உழைப்பாளர் தினக் கவிதை. அணைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
எல்லோரும் யதார்த்தங்கள் மூலம் உழவனை பாடுவார்கள். நான் உழவன் மூலம் யதார்த்தங்களை இன்றைய நாளில் தேடிப் போகிறேன்.
மூங்கில் நந்தவனமே
என்னை வாசியுங்கள்
புல்லாங் குழல்களால்
சிலுவைகள் தாங்கள்!
காற்றின் விலாசத்தில்
கலைந்து போன கனவு
குருவிகளின் கூட்டில்
கைகளைக் கட்டி நிற்க
உழைப்பாளி வாழ்வில்
வெளிச்சம் கிடையாது
எதிர்த்தவன் உடம்பில்
மூச்சின் ஓசை கேளாது
மனிதன் என்ற பெயரில்
பாலை போல மனிதம்
ஏழையின் தட்டைக்கூட
திருடிப் பார்க்க திட்டம்
கோழை போல நியாயம்
பாடைகள் சுமந்து போக
சிந்தும் விழிநீர்த்துளிகள
ஊழலில் திளைக்கும்
உத்தமர்களின் செயல்பாடோ!
ஒரு தாய் மக்களின்
உறவறுத்த நிலைபாடோ!
தன் நலம் காத்திட
தடுத்துவிட்ட தந்திரமோ!
கல்வெட்டில் பதித்த பின்னும்
காலம் தாழ்த்தும் மந்திரமோ!
சத்தியங்கள் செத்தபின்னே
சாத்தானின் சாபக்கேடோ!
பட்டுபோன நிலத்தில் விட்ட உயிர்கள்
நட்டு வைத்தால் துளிர்க்குமோ!
காலமெல்லாம் காத்தவளை
கட்டிபோட்டு கொல்லவோ!
கட்டுக்கடங்காம கட்டவிழ்ந்தால்--சவத்தை
தொட்டுவிட்டு போகவோ!
படைத்த பரமனுக்கும்
பாவமின்னு தோனலையோ!
நதிநீரை இணைக்கவும்
நல்ல நேரம் பார்க்கணுமோ!—இல்லை
கடைகோடி பாரதத்தை
கங்கைக் கரையில் அமர்த்தனுமோ!
எது சிறப்பானதென்று—முடிவு
எடுப்பவர்களுக்கு தெரியாதா என
கூட்டுக்குள் இருந்து
விடுபட்டு
சுதந்திரக் காற்றை
சுகமாய் சுவாசிக்க
விழைந்தேன்
எட்டுநாட்கள் உனக்கு
என்று
விடுவித்தது காலம்
காலத்தை கணக்கில்
எடுக்காது
சிறகை விரித்து
பறந்தேன்
முதலில் எங்கே
போவதென்று முடிவு
செய்யாது
தூரத்தில் கோவில்
கோபுரம்
கண்ணில் பட
கடவுளை பார்ப்போம்
என்றே
அங்கே சென்றேன்
ஐய்யகோ அங்கே
நான் கண்ட காட்சி
எட்டுவயதுக் குழந்தை
கிழிப்பட்ட நாராய்
வெறிநாய்களின்
குதரலில்
கடவுளை பார்த்துபோக
வந்த நான்
கடவுளிடம் கேட்டேன்
உன் படைப்பு தானே
அத்தனையும் பின்
ஏன் நடக்கிறது
உன் கண் முன்னே
இத்தனையும் என்றே
அமைதியாக ஒ
நண்பர்கள் (22)

ARUN KUMAR B.
திருச்செங்கோடு,நாமக்கல்.

Akckumar
vellore

தினேஷ்n
குலையநேரி (திருநெல்வேலி Dt)m
