தெரியாதா என்ன

ஊழலில் திளைக்கும்
உத்தமர்களின் செயல்பாடோ!
ஒரு தாய் மக்களின்
உறவறுத்த நிலைபாடோ!
தன் நலம் காத்திட
தடுத்துவிட்ட தந்திரமோ!

கல்வெட்டில் பதித்த பின்னும்
காலம் தாழ்த்தும் மந்திரமோ!
சத்தியங்கள் செத்தபின்னே
சாத்தானின் சாபக்கேடோ!
பட்டுபோன நிலத்தில் விட்ட உயிர்கள்
நட்டு வைத்தால் துளிர்க்குமோ!

காலமெல்லாம் காத்தவளை
கட்டிபோட்டு கொல்லவோ!
கட்டுக்கடங்காம கட்டவிழ்ந்தால்--சவத்தை
தொட்டுவிட்டு போகவோ!
படைத்த பரமனுக்கும்
பாவமின்னு தோனலையோ!

நதிநீரை இணைக்கவும்
நல்ல நேரம் பார்க்கணுமோ!—இல்லை
கடைகோடி பாரதத்தை
கங்கைக் கரையில் அமர்த்தனுமோ!
எது சிறப்பானதென்று—முடிவு
எடுப்பவர்களுக்கு தெரியாதா என்ன !

எழுதியவர் : கோ. கணபதி. (14-Apr-18, 8:04 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 59

மேலே