வேண்டிக்கொண்டு

கூட்டுக்குள் இருந்து
விடுபட்டு

சுதந்திரக் காற்றை

சுகமாய் சுவாசிக்க
விழைந்தேன்

எட்டுநாட்கள் உனக்கு
என்று

விடுவித்தது காலம்

காலத்தை கணக்கில்
எடுக்காது

சிறகை விரித்து
பறந்தேன்

முதலில் எங்கே

போவதென்று முடிவு
செய்யாது

தூரத்தில் கோவில்
கோபுரம்

கண்ணில் பட

கடவுளை பார்ப்போம்
என்றே

அங்கே சென்றேன்

ஐய்யகோ அங்கே

நான் கண்ட காட்சி

எட்டுவயதுக் குழந்தை

கிழிப்பட்ட நாராய்

வெறிநாய்களின்
குதரலில்

கடவுளை பார்த்துபோக
வந்த நான்

கடவுளிடம் கேட்டேன்
உன் படைப்பு தானே

அத்தனையும் பின்
ஏன் நடக்கிறது

உன் கண் முன்னே
இத்தனையும் என்றே

அமைதியாக ஒன்றும்
நடக்காதது போல்

எப்போதும் போல்
கல்லாய்,

போதும் எனக்கு இந்த
எட்டு

வேண்டாம் எந்த எட்டுக்கும்
அந்த நிலை

இந்த "விளம்பியிலாவது"
விடியட்டும்

விடைபெறுகின்றேன்

இனி வேண்டாம் ஒரு
பிறவியென்று

என வேண்டிக்கொண்டு.
நா.சே..,

எழுதியவர் : Sekar N (14-Apr-18, 7:56 am)
பார்வை : 220

மேலே