பொங்கலாய் வாழ்த்துதும்
சேவல் கூவியதுமே நீராடிக் கோலமிட்டு,
வீட்டிலே புன்னகைகள் கோடி விருத்திசெய்
சுடர் வரவே,
பானையில் நெய் நிறை பாலோடு சேர்த்து,
புத்தரிசியும் உறவாடி பொங்கலாய் ஓங்கி!
ஆதவனும் ஆட்சி அமைக்க மங்கலமாய் நாம்,
வழிபடும் காலம் இது வாழ்த்துக்கூடுமென்றே.
உழவன் வியர்வைதனை வெண்பொன்ணாய் செய்தவிந்தையால்,
அவன் தாள்வணங்கி
பொங்கலாய் வாழ்த்துதும்.