விடாமுயற்சி
![](https://eluthu.com/images/loading.gif)
பிடித்ததைச் செய்தால் வெறுக்கும் காலமோ?
நோகடிக்கும் வார்த்தைகளால் சாகடிக்க வேண்டுமோ?
என்னவாயிற்று உங்களுக்கு? எளிதாக திட்டித்தீர்த்து,
மீண்டும் திட்டித்தீர்க்க தயாராகி விட்டீர்களே!
தோற்றாலும் இதெல்லாம் தேவையாயென விமர்சிக்கிறீர்கள்,
வென்றாலும் அப்படியென்ன சாதித்துவிட்டாயென விமர்சிக்கிறீர்கள்,
உங்களின் தரங்கெட்ட சொற்கள் தடுத்திடுமோ,
விடாமுயற்சி என்னும் புயலை.