நில்நில் சற்றென்முன்னே நில்

மல்லிகைப் பந்தலில் மாலைத்தென் றல்வீச
வில்லாய் வளந்தயிரு வண்ணக் கரும்புருவம்
வல்வேல் விழிகளில் வேள்மாறன் பூங்கணை
நல்லெழில் கூந்தலில் நன்மலர்கள் ஆடிட
வெல்லநீ வந்தாயோ மாறன் இளவலை
சொல்லமுதம் சிந்துதே சொர்க்கத் தமிழ்எழுத்து
நில்நில்சற் றென்முன்னே நில்

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (3-Oct-25, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே