காற்றாடி

உயர உயர பறக்கும் காற்றாடி
தன்னை மேகத்தை தொடும் கழுகு
என்று ஒரு நொடி நினைத்து பெருமையில்
திளைக்க .....வேறோர் காற்றாடி இதன்
பக்கம் வந்து மோதிட கட்டவிழ
பறக்க முடியாது கீழ் நோக்கி வந்து
மின்சார கம்பத்தில் மாட்டிக் கொண்டு
தன் மூச்சை விட்டது ......அறுத்து விட்ட காற்றாடி
இப்போது உயர உயர பறந்தது
தன்னை ஓர் பெரும் பறவை என்ற எண்ணத்தில் !!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Jan-25, 1:54 pm)
Tanglish : kaatraadi
பார்வை : 1

மேலே