காதலர்களாக கலந்த நாள்

நீ நான் என்று இருந்தோம்
என் வாழ்வின் தனிமையை நீக்கி
என்னில் நீயும் உன்னுள் நானும் ஒன்றாகி
நாம் என்று உருவாகிய நாள்
என் இதயத்தில்
உன் இதயத்தின் துடிப்பு
ஒலிக்கும் நாள்
என் சுவாசம் உனது மூச்சுக்காற்றாய் மாறிய நாள்
என் உடலில் உன் உயிரை சுமந்து இரு உயிர் ஓர் உடலில் வாழும் உன்னதமான நாள்
என் உடல் முழுவதும் உன் உதிரமாய் என்னுள் உன்னை சுமக்கும் நாள்
கண்களால் காதல் பேசி நாம் காதலர்களாக கலந்த நாள்!!!