நா சேகர் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  நா சேகர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  19-Jul-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-May-2016
பார்த்தவர்கள்:  2797
புள்ளி:  1064

என்னைப் பற்றி...

கற்றுக்கொண்டிருப்பவன்..,

என் படைப்புகள்
நா சேகர் செய்திகள்
நா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2019 12:04 am

கண் பார்வையை
நிறுத்தி

என்னைக் கடந்தால்
ஒருத்தி

வானுலக தேவதை
வழிதவறியதோ

தவிர்க்க முடியாத்
தள்ளல்

அவள் அருகே
அழைத்து செல்ல

நான் பார்த்ததை
அவள் பார்க்க

அவள் பார்வையில்

மிரட்சியும் இல்லை
மிரட்டலும் இல்லை

நான் மட்டும்
ஊமையாக

அதற்கு அவள்
காரணமாக

சில்லரையாக சிரித்து
விட்டாள்

முரட்டுகுதிரை என்னை
கடிவாளம்

இன்றி கட்டிவிட்டாள்

கண்டதும் காதல்
இதுதானோ?

மேலும்

நா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2019 4:34 pm

நொடிக்கு இரு தடவை
உச்சரிக்கிறதே

உன் பெயரை என்
இதயம்

அப்படியெனில்

நிமிடத்திற்கு எழுபது
முறை

இதயதுடிப்பு பொய் தானே?

மேலும்

நா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2019 10:12 am

திறையிட்டு மறைக்க
நினைத்து

தோற்ற அழுகை

உறையிட்ட தலையணை
தேற்ற நினைத்தும்

தோற்றது..,

மேலும்

நா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2019 7:05 pm

கண்ணாமூச்சி ஆட்டம்
கற்றுத் தந்தாள்

அம்மா

நான் குழந்தையாய்
அப்பொழுது

சிரிப்பைத் தந்தது

கண்ணாமூச்சி ஆடுகிறாள்
கணாமுடியவில்லை

நான் வளர்தவனாய்
இப்பொழுது

காதலி

சிதைந்தது சிரிப்பு..,

மேலும்

நா சேகர் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2019 5:07 pm

மழைநீராய் நான் கண்ணீர்
சொரிய

மின்னலாய் உன் கைகள்
துடைக்க

அந்த நொடியில் ஆனந்தக்
கண்ணீர்

போதுமடா மகனே உன்னை
பிள்ளையாய்

பெற்றதன் பலன்..,

மேலும்

நன்றி நட்பே 11-Apr-2019 7:52 pm
அருமை கவிதையும், ஓவியமும். 11-Apr-2019 6:47 pm
நா சேகர் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2019 8:11 am

உலகம் சுற்றுதாம்
உண்மைதான்

மைய்ய புள்ளியாய்
விவசாயி

சுற்றித்தானே ஆகனும்
உழைப்பல்லவா

கோவணம் மட்டுமே
பரிசு

அவன் உழைப்பிற்கு
நாம் தந்தது

உடைபாரம் தாங்க
மாட்டான் என்றோ?

மேலும்

வெகுதூரமில்லை அவன் அருமை புரிய நன்றி நட்பே.., 11-Apr-2019 12:51 pm
ஒரு பாரமும் தாங்கமாட்டான் என்று வாக்களிக்கும் உரிமையோடு மட்டுமே வைத்துள்ளார்கள் விவசாயியை. அழகான பதிவு. 11-Apr-2019 11:47 am
நா சேகர் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2019 10:01 am

ஒருதுளியை வடிகட்டி ஒர்
அணுவை

உயிராக்கி உருவாக்கி உதிர
உணவூட்டி

சிறைக்குள் சீராட்டி வெளியேற்றி
குளிப்பாட்டி

தாயாய் தாதியாய் சகோதரியாய்
நட்பாய்

அப்பப்பா நான் பட்டகடனை
எப்படி தீர்ப்பேன்

அம்மா?

மேலும்

Wow நன்றி நட்பே 10-Apr-2019 10:24 pm
உண்மை நட்பே. 10-Apr-2019 10:23 pm
மனமே மகத்தான இசைக்கருவி என்பார் மாஸ்ட்ரோ இசைக்கடலில் முழ்கி எடுத்து வந்து கொடுத்த முத்துக்கள் எத்தனை நன்னாடரே பசும்புல் அவர்மேல் பனியாக படிந்தது உமது கவிதை சங்கர் சேதுராமன் 10-Apr-2019 3:16 pm
கற்று கொடுப்பவருக்கும் கடவுளுக்கும் முதன்மையவள் கருவறையில் வைத்து காத்தவள் ஆயிற்றே கடன் தீராது சங்கர் சேதுராமன் 10-Apr-2019 1:54 pm
நா சேகர் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2019 9:06 pm

எனக்கான உணவு

என் பொருட்டு
உறக்கம்

எல்லாம் தடையின்றி
என்பதால்

நான் பயமின்றி
கருவறையில்

கருவறை நேசம்
விட்டபின்

சுவாசம் நிற்கும்
வரை ஓட்டம்

பயம் என்னை
விரட்டியதே

கல்லறை வரை

மேலும்

நன்றி நட்பே 08-Apr-2019 12:08 am
அருமை வாழ்த்துக்கள் 07-Apr-2019 9:28 pm
நா சேகர் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2017 10:22 pm

இந்தியாவில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு சலுகை வழங்காமல், அரசு முற்றிலும் புறக்கணிப்பதால், பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் கூட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சர்க்கஸ் கலை சாகசம் நிறைந்தது; உயிரைப் பணயம் வைப்பது. அந்தரத்தில் பார் விளையாட்டு, மரண கூண்டுக்குள் பைக் ரேஸ், சிங்கம், புலி, கருஞ்சிறுத்தை என, கொடிய விலங்குகளை சாட்டையின் ஒரு சொடுக்கில் ஆட்டுவிக்கும் சாகசங்கள், பார்வையாளர்களை, "சீட்'டின் நுனிக்கு வரவைக்கும்.

இந்தியாவில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், நியூ கிராண்ட், அப்போலோ, நேஷனல், கேமல், மகாராஜா, வீனஸ் என, மிகப்பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் கோலோச்சின. ஒவ்வொரு கம்பெனியை நம்பியும், 350க்கும் க

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

Felix Jesudoss

Felix Jesudoss

Chengalpattu
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
மேலே