நினைவுகள்

என் இதயத்தில் உன்னை
சுமந்து திரிகிறேன்

சுகமான சுமையானதால் கணக்கவில்லை நீ

மறுப்பின்றி வெறுப்பின்றி
நகர்ந்து விட்டதால்

வெற்றிடமாகிவிடும் என்று
நீ நினைத்திருப்பாய்

காற்றாய் உன் நினைவுகள்
அதை

நிரப்பிவிட்டதால் இன்னும்

என் இதயத்தில் உன்னை
சுமந்து திரிகிறேன்

எழுதியவர் : நா.சேகர் (30-Aug-21, 7:56 am)
Tanglish : ninaivukal
பார்வை : 437

மேலே