பூமகள் பூப்பறிக்க புன்னகையில் வந்தாய்

பூமலரும் வேளையில் பூங்காற்று வீசிட
தாமரைப் பூம்பொழில் தன்னில் கதிர்விரிய
பூமகள் பூப்பறிக்க புன்னகை யில்வந்தாய்
காமன் ரதியழ கில்

பூமலரும் வேளையில் பூங்காற்று வீசிட
தாமரைப் பூமலர்ந் தாடிட --தீமையிலா
பூமகள் பூப்பறிக்க புன்னகை யில்வந்தாய்
காமன் ரதியழ கில்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jun-25, 8:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே