காதலை கண்டடைதல்

நீ கல்லூரி வராமல் விடுமுறை எடுக்க காரணமான காய்ச்சலுக்கு நன்றி!
நீயில்லாத வகுப்பறையில் நிறைந்திருந்த உன் நினைவுகள்,
வருகைப்பதிவின் போது வாசிக்கப்பட்ட உன் பெயர்,
நீ அமர்ந்த நாற்காலி,
என அனைத்தும் சேர்த்து இது காதல் என உணர்த்த காரணமான உன் காய்ச்சலுக்கு நன்றி!

எழுதியவர் : பாண்டி (5-Jun-25, 12:59 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 228

மேலே