அம்மா

அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் நீயே
பாசமென்ற சொல்லுக்கு பொருளும் நீயே

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
உன் அன்பை மட்டுமே தேட வைத்தாய் அம்மா

இதயம் அற்ற உயிராய்
உன் கருவறையில் துடித்து கொண்டிருந்தேன்
உன்னிடம் இதயம் எங்கே என கேட்போரிடம்
கருவறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது
என சொல்லி சிரித்தாய்

வளர்பிறையாய் உன் கருவில் வளரும் போதே
முழு நிலவாய் நீ என்னை தொட்டு ரசித்தாய்

மூச்சடக்கி ஈன்றாய் என்னை
மூச்சுள்ள வரை மறவேன் உன்னை

கருவறையில் சுமந்த என்னை
கருவிழில் வைத்து காத்தாய்

என் முகம் காணும் முன்னே
என் மீது பேரன்பு கொண்டாய்

என் முகம் கண்ட பின்னே
பேரானந்தம் கொண்டாய்

பிறக்கும் முன்னே உன் விழி கொண்டு உலகை கண்டேன்
பிறந்த பின்னே உன் எதிர் நின்று என் உலகை காண்கிறேன் அம்மா

தோல் சாய்த்து தாலாட்டு பாடையில்
சொர்க்கத்தில் இருப்பது போல ஆனந்தம் கொண்டேன்

எண்ணற்ற ஏக்கங்கள் என்னுள் அருவியாய் ஓடும்போதெல்லாம்
அன்பென்ற அணை கட்டி என்னுள் இன்பம் பொங்க செய்தாய்

அம்மா என்று அழைக்கையில்
வலி கொண்ட இதயம் கூட
வலி மறந்து சிரிக்கும்

கருவறையில் இருந்த உணர்வை
உன் மடியில் உணர்கிறேன்

ஆயிரம் கவிதைகள் உனக்காக எழுதினாலும்
அம்மா என்ற ஒரு வார்த்தை கவிதைக்குள்
அனைத்தையும் அடக்கி கொண்டாய்

அம்மா என்ற வார்த்தைக்குள் ஆயிரம் உறவுகளை அடக்கி கொண்டாய்
உன் மடி சாய்ந்து உறங்கும் போது
என் கவலை எல்லாம் மறந்து போகும்
என் சோகமெலாம் சுகமாய் மாறும்

நிலா காட்டி சோறூட்டும் போதும் தெரியாது அம்மா
என்னையே சுற்றி வந்த நிலா நீ தான் என்று

அன்பை மட்டுமே எதிர் பார்க்கும் ஓர் உறவு

கருவில் சுமந்த உன்னை
மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்

மனதார வேண்டுகிறேன்
மீண்டும் நீயே என்னை கருவில் சுமக்க

என்ன தவம் செய்தேன் உனக்கு மகனாய் பிறக்க
என்ன வரம் பெற்றேன் நீ என் தாயாய் வந்திட

அடுத்த பிறவியிலும் இதே வரம் பெற்றிட வேண்டுகிறேன்

எழுதியவர் : Ranjith Vasu (11-May-19, 5:05 pm)
Tanglish : amma
பார்வை : 2233

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே