கோவலூர் த.வேலவன். - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கோவலூர் த.வேலவன். |
இடம் | : திருகோவிலூர் |
பிறந்த தேதி | : 19-Jul-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 268 |
புள்ளி | : 20 |
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை .
ஆனால் ,
அவளால் உலகின் அழகெல்லாம் ஒன்றும்மில்லாது போனது ,
எனக்கு மட்டும் தான் தெரியும் ....
நான் இதுவரை இப்படி ஓர் கவிதையை படித்ததில்லை .
ஆம் ,அப்படிதான் இருந்தது அதன் உருவகம் ,
என் உயிரைப்போலவே ...
ஓரடி மண்ணில் அவளின் காலடி ...
அவளின் தாமரை போன்ற முகத்தை கண்டபிறகு
அந்த தாமரைக்கும் மட்டுமல்ல ,
இந்த குலத்திற்கும் வெட்கம் வந்ததை தான்
நான் மட்டும்மல்ல
அந்த தவளைகளும் கத்தி கத்தி சொல்கின்றன
மழைக்காலங்கள் தோறும் .....
மதி என்றால் அறிவு போன்றவள் வதனி நீலா முகம் அழகி இனிமை தமிழ் பெயர்
அவள் என் மனதில் வந்து
அமர்த்த பிறகு தான்
என் மனதிற்கு
சிறகு முளைத்தது ...
நான் அவளை நினைத்து பறக்க தொடங்கிய போது தான்
எனக்கு வானம் தெரிந்தது .
இன்று அவள் இல்லை
அவளின் உதிர்ந்த சிறகொன்று
என் உயிரில் உயிராய் உள்ளது .
காகம் நரியிடம்
ஏமாந்த கதை
கேட்டுவிட்டு
கேட்டது குழந்தை
..
அப்புறம்
காகத்தின்
பசிக்கு
யார் உணவு
தந்தார்கள்
என்று !
பூக்களை பறிப்பது
செடிகளுக்கு பிடிக்காது.
நீ
பூக்களை பறிக்காமல் விடுவது
செடிகளுக்கு பிடிக்காது .
அந்தி மகளின் அவதாரமாய்
வர்ணம் பூசி உலா வருகிறாள்
வான் சுமக்கும் கார் முகில் ...!
முந்தி சரியாது
முகம் மலர்ந்து
பந்தி வைக்கிறாள்
கார் மேகமவள்...!
அபயக்குரல் எழுப்பியும்
ஆபத்திற்கு உதவிட யாருமின்றி
கற்பிழந்து கண்ணீர் வடிக்கிறாள்
இம்மண்ணில் மழையாக ...!
ஒருவரின் அழிவில்
ஒருவர் வாழும் நிலை தான்
இம்மண்ணில் ...
இமயமாய் இருந்தவள்
சரிந்து சாய்கிறாள் நம் கண்ணில் ...
அந்தி மகளின் அவதாரமாய்
வர்ணம் பூசி உலா வருகிறாள்
வான் சுமக்கும் கார் முகில் ...!
முந்தி சரியாது
முகம் மலர்ந்து
பந்தி வைக்கிறாள்
கார் மேகமவள்...!
அபயக்குரல் எழுப்பியும்
ஆபத்திற்கு உதவிட யாருமின்றி
கற்பிழந்து கண்ணீர் வடிக்கிறாள்
இம்மண்ணில் மழையாக ...!
ஒருவரின் அழிவில்
ஒருவர் வாழும் நிலை தான்
இம்மண்ணில் ...
இமயமாய் இருந்தவள்
சரிந்து சாய்கிறாள் நம் கண்ணில் ...