கா.ந.கல்யாணசுந்தரம - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/cynxm_1446.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கா.ந.கல்யாணசுந்தரம |
இடம் | : செய்யாறு, திருவண்ணாமலை மா |
பிறந்த தேதி | : 17-Dec-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Oct-2010 |
பார்த்தவர்கள் | : 665 |
புள்ளி | : 158 |
மனிதநேயம் ஒன்றே மகத்தானது. இதை இந்த மானுடம் எப்போதும் அறிந்து மனிதநேயத்துடன் வாழ வேண்டும். மனிதநேயமிக்க ஹைக்கூ கவிதைகள், நவீன கவிதைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருகிறேன்.
1 மனிதநேயத் துளிகள் எனும் ஹைக்கூ கவிதை நூல் ஒன்று வெளியிட்டுள்ளேன்.
2 . 1991 ல் பாவேந்தர் பட்டயம் வழங்கப்பட்டது.
3 . செய்யாறு தமிழ்ச் சங்கத்தின் நிறுவன தலைவராக மூன்று ஆண்டுகள் அயராத பணி.
தமிழ்ச் சேவை எனது தலையாய பணி.
எனது கவிதைகளை:
www .kavithaivaasal .com
வலைத்தளத்தில் கண்டு படித்து மகிழவும். பின்னூட்டம் அளிக்கவும்.
நன்றி. எழுத்து.காம்.
* இசைவான வாழ்க்கைப்
சொல்லிடைச் சொரிந்து வல்லினம் புகுத்தும்
மெல்லிடை யாள(ழ)வள்; இல்லறம் வகுத்துப்
பல்லவி பாடினும் தொல்லியல் காவியம்
நல்லெனத் தீண்டிடு வாளே.
கட்டுமரங்கள்
ஓய்வெடுக்கின்றன
விசைப்படகு வாழ்க்கை
Catamarans
take rest
Life of motor boat.
மாசு படிந்த சூழல்
சுமக்கத் தயாராய் இருங்கள்
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு
பிராணவாயுக் குப்பிகள்
ரசிகர்கள் கூட்டத்துடன் ஆடியபடி
வருகிறாள் கரகாட்டக்காரி
தேரை வடம் பிடித்திழுக்க
யாரையும் காணவில்லை
குளத்தில் தவமிருக்கும் கொக்கு
மீனைக் கொத்தாமல் விடுவதில்லை
வற்றிய குளத்தின் சுவடுகள்
பேசிப்பேசி அங்கலாய்க்கின்றன
முள் நிறைந்த காடு
முகம் சுளிக்காமல் வருகிறாய்
எப்படி சாத்தியமாகிறது
தென்றலே உனது வருகை ?
தனிமையில் நடக்கும் போது
பாதைகள் எப்போதுமே நீளும்
உன்னுடனான பயணிப்பில்
தென்றல்மட்டுமே குறுக்கீடு
.....கா.ந.கல்யாணசுந்தரம்
தன்முனைக் கவிதைகள்
எப்போதுமே இசை மீட்டுகிறது
வாழ்வியல் கிளைகளின்
நினைவுக் குயில்கள்
துள்ளும் கயல்கள்
இன்னமும் எனது தூண்டிலில்
சிக்காமல் தப்புகிறது
என்னையே சுட்டிக் காட்டுகிறது
ஓடி ஒளிந்து கொள்ளவில்லை
உணர்வுகளால் தலை நிமிர்கிறேன்
முகத்தில் பளிச்சிடுகிறது
முத்துப் பற்கள் உதிர்க்கும்
உனது புன்னகை மலர்கள்
துணிந்தவர்கள் யார் ?
வெட்கமுடன் தலைகுனிகிறது
ஆபரணங்கள் !
புறப்படும் ஆதவனாய் குங்குமம்
எனது வாழ்வின் விடியலில்
சங்கமிக்கிறது நாள்தோறும்
அணிசேர்த்து அழகுபார்க்கின்றன
நன்மக்கள் பேற்றுடன்
தாய்மையின் அரவணைப்பு
என் நெஞ்சை சேதப்படுத்திய உன் விழியால் காதல் பிறந்தது...
சிலம்புச் செய்திகள்
குறும்பா வடிவில்....
*************************************************
*மரபுவழி மங்கள நாணொடு
புகாரில் மனையறம் கொண்டாள்...
கற்புக்கரசி கண்ணகி !
*மாசறு பொன்னுடன்
நல்லறம் சிறக்க இல்லறமானது...
கோவலனின் வாழ்வு !
*தன்னிலை மறக்கும்
சொர்க்கபுரியானது...
நரவுப்பட்டின வசந்தவிழா!
*விடுதலை அறியா
விருப்பினனாகினான்...
கோமகன் கோவலன்!
*யாழிசை மீட்டியபடி கடலாடிய
கானல்வரிப் பாடல்கள்...
கோவலனோடு மாதவி !
*ஆடல்மகள் மாதவியின் கூடலில்
குன்றமன்ன பொருளிழந்தான்...
குற்றமற்ற கண்ணகியின் கணவன்!
*ஊழ்வினை உறுத்த
மாதவியின் கரம் நெகிழ...
கோவல
ஒரு
பகல் பொழுதின்
ஆளுமையில்
அவனின் பலம்
அனைத்தும்
இழந்த நிலையில்
கைகளில்
திணிக்கப்படுகின்றன ...
இன்றைய
பொழுதுக்கான
சம்பளம்!
ஆள் அரவமற்ற
தெருவோரத்து
குடிசைக்குள்
கால்கள் சற்றே
ஓய்வெடுத்தன ....
மல்லாந்து
படுத்த அவனது
கண்களுக்கு
கோளரங்கம் ஆனது
குடிசையின் கூரை!
அடுத்த நாளின்
நகர்தலுக்கான
தேடல்...
மனதுக்குள்
ஏக்கப் புள்ளிகளுடன்
கோலமிட்டன....
வாசல் இல்லாத
அவனது வீட்டின்
உழைப்பு முற்றத்தில்....!
.....கா.ந.கல்யாணசுந்தரம்
மின்னஞ்சல் கூட
வெட்கித் தலைகுனியும் ...
உனது ஓரவிழிப் பார்வை ...!
....கா.ந.கல்யாணசுந்தரம்
மரங்கொத்தியின்
பொந்துக்குள்
கிளிகளின் வாழ்க்கை
காக்கையின்
கூட்டில்
குயிலின் குஞ்சுகள்
எறும்பின் புற்றுக்குள்
நாகத்தின்
வாழ்வு
வண்டுதுளைத்த
மூங்கிலுக்குள்
தென்றலின் வரவு
நதிவருடிய
கூழான் கற்களுடன்
சிறுவர்கள்
ஆலம் விழுதுகளில்
ஊஞ்சல்கட்டி ஆடும்
சிறுமியர்
இரவின் மடியில்
உலகின்
பகல் பொழுது
இயற்கை
இறைவனின் படைப்பு
அதில் நமது
இயைந்த வாழ்வே
நமக்கு கிடைத்த
வரம்....!
..........கா.ந.கல்யாணசுந்தரம்
எதிர்பார்ப்புகளின்றி
நடப்பவையெல்லாம்
இறைவன் நமக்களிக்கும்
இன்பதுன்ப
சோதனைகளும்
வேதனைகளுமே....!
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
வாழ்நாட்கள் தருகின்ற
படிக்கட்டுகளின்
விளிம்புகள்
இன்பத்தின் படிக்கட்டுகளை
மட்டுமே பாதங்கள்
ஸ்பரிசிப்பதில்லை..
துன்பங்களையும்
தோல்விகளையும்
சுமக்கின்ற
தோள்களுக்கு மட்டுமே
தெரிந்திருக்கிறது
சுமைகளை இறக்கிவைக்கும்
மனதைப் பற்றி....
தன்னம்பிக்கையும்
தளர்வறியா நெஞ்சுரமும்
உணர்வுகளின் தாகத்திற்கு
அருந்தத் தருவீர் ...!
.......கா.ந.கல்யாணசுந்தரம்
முதல் பக்கத்தில்
முன்னுரை எழுதினர்
பெற்றோர்!
அணிந்துரை தந்த
உறவுகள்
பின்குறிப்புகளில்
ஒளிந்திருந்தனர்!
நட்புத் தாட்களில்
எனது சாதனைகள்
தலைப்புகளானது!
திசை மாற்றிய
தடைக் கற்கள்
அருஞ்சொல் விளக்கமாய்
உடைத்தெரிக்கப்பட்டன!
முடிவுரைக்கான பக்கங்களை
பிள்ளைகளுக்காய்
பகிரப்பட்ட எனக்கு
அட்டைப்படத்தில் கூட
இடம்பெற பிடிக்கவில்லை ......!
காரணம்......
அடையாளம் தொலைத்தபின்
இன்னொரு முகமூடி
எனக்கெதற்கு?
///////கா.ந.கல்யாணசுந்தரம் //////
நண்பர்கள் (74)
![கோவலூர் த.வேலவன்.](https://eluthu.com/images/userthumbs/f2/otukp_26723.jpg)
கோவலூர் த.வேலவன்.
திருகோவிலூர்
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![வாசு](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
வாசு
தமிழ்நாடு
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
லட்சுமி தேவி
சென்னை
![ர~ஸ்ரீராம் ரவிக்குமார்](https://eluthu.com/images/userthumbs/f4/irhjv_40530.jpg)