உழைப்பாளி

ஒரு
பகல் பொழுதின்
ஆளுமையில்
அவனின் பலம்
அனைத்தும்
இழந்த நிலையில்
கைகளில்
திணிக்கப்படுகின்றன ...
இன்றைய
பொழுதுக்கான
சம்பளம்!

ஆள் அரவமற்ற
தெருவோரத்து
குடிசைக்குள்
கால்கள் சற்றே
ஓய்வெடுத்தன ....

மல்லாந்து
படுத்த அவனது
கண்களுக்கு
கோளரங்கம் ஆனது
குடிசையின் கூரை!

அடுத்த நாளின்
நகர்தலுக்கான
தேடல்...
மனதுக்குள்
ஏக்கப் புள்ளிகளுடன்
கோலமிட்டன....
வாசல் இல்லாத
அவனது வீட்டின்
உழைப்பு முற்றத்தில்....!

.....கா.ந.கல்யாணசுந்தரம்

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (4-May-16, 4:09 pm)
Tanglish : ulaippu
பார்வை : 818

மேலே