விழிகளில் தெரிகிறது வினாக்கள் பலநூறு

சுழலும் கோளத்தால்
காலமும் மாறுகிறது ...
உழலும் நிலையிலும்
பயணம் தொடர்கிறது ...!
கோடையின் தாக்கத்தால்
பூமியும் தகிக்கிறது ...
வெப்பத்தின் உச்சத்திலும்
உயிர்கள் வாழ்கிறது ...!
இயற்கை மாற்றங்கள்
இவ்வுலகில் நிகழ்கிறது ...
விஞ்ஞான ஆய்வுகள்
வியப்பில் ஆழ்த்துகிறது ...!
உள்ளங்களின் உரசலால்
உறவுகள் உடைகிறது ...
இணைந்த நட்புகளும்
இருகூறாய் பிரிகிறது ..!
உண்மை உறங்குவதால்
போலிகள் உலவுகிறது ...
வேடங்கள் தரிப்பதால்
பொய்யும் மெய்யாகிறது ..!
பகுத்தறிவு மறைவதால்
பலரின்நிலை மாறுகிறது...
பண்பாடு தேய்வதால்
நம்நாடு சீரழிகிறது ...!
ஒற்றுமை குலைவதால்
வேற்றுமை வளர்கிறது...
சாதிவெறி ஓங்குவதால்
மனிதம் அழிகிறது ...!
சிந்தையும் பண்பட்டால்
சீர்திருத்தம் உருவாகும் ...
சிந்தித்து செயல்பட்டால்
சிறப்புறும் சமுதாயம் ...!
இதைதான் கூறுகிறதோ
இம்மழலை நம்மிடம் ...
விழிகளில் தெரிகிறது
வினாக்கள் பலநூறு ..!
பழனி குமார்