அரசியல் குற்றம்செய் அறம்கூற்றாய் நிற்கும்

அரசியல்குற் றம்செய் அறம்கூற்றாய் நிற்கும்
வரைவேள் இளவலின் வாக்குபொய்க் காது
முறைகேடு கள்பெருகி மோசடிகள் எங்கும்
அறம்நீயே உன்செயலை ஆற்று

பொருட் குறிப்பு :

கூற்றாய் -----எமனாய்

வரைவேள்----வரை --மலை வேள் --மன்னன் ---மலைநாடு சேரநாடு
சேரன் செங்குட்டுவன் இளவல் தம்பி இளங்கோ
இளங்கோவின் சிலப்பதிகாரச் செய்தி அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-25, 11:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 9

மேலே