தளர்வறியா நெஞ்சுரமும்
எதிர்பார்ப்புகளின்றி
நடப்பவையெல்லாம்
இறைவன் நமக்களிக்கும்
இன்பதுன்ப
சோதனைகளும்
வேதனைகளுமே....!
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
வாழ்நாட்கள் தருகின்ற
படிக்கட்டுகளின்
விளிம்புகள்
இன்பத்தின் படிக்கட்டுகளை
மட்டுமே பாதங்கள்
ஸ்பரிசிப்பதில்லை..
துன்பங்களையும்
தோல்விகளையும்
சுமக்கின்ற
தோள்களுக்கு மட்டுமே
தெரிந்திருக்கிறது
சுமைகளை இறக்கிவைக்கும்
மனதைப் பற்றி....
தன்னம்பிக்கையும்
தளர்வறியா நெஞ்சுரமும்
உணர்வுகளின் தாகத்திற்கு
அருந்தத் தருவீர் ...!
.......கா.ந.கல்யாணசுந்தரம்