வாழும் வரம்

வாழும் வரம்

கஷ்டங்கள் என்னை கலங்கடித்தன
துயரங்கள் என்னை துன்புறுத்தின
வலிகள் என்னை வாட்டி வதைத்தன
சுருண்டு என்னுள் ஒடுங்கிக்கொண்டேன்.

மெல்ல திறந்தது கதவு உள்ளே நுழைந்தது நம்பிக்கை
வருடிக்கொடுத்தது, வாரி அணைத்துக் கொண்டது
நானிருக்கிறேன் என்றது பக்கமும் பலமுமாக
நீயெழுந்திரு என்றது வெற்றியும் உனதாக

விடாமல் விலகாமல் சேர்த்துவிடு
சிந்தாமல் சிதறாமல் கோர்த்துவிடு
உற்றாரா உறவினரா கேட்டுவிடு
எதிரியோ பகைவனோ அடக்கிவிடு
துக்கமா துயரமா சவால்விடு
நீயாநானா ஒருகை பார்த்துவிடு
வலியா வேதனையா ஒடுக்கிவிடு
வெற்றியை மாலையாய் அணிந்துவிடு
கலங்காது கடந்துநில் காலம் உனது
துவளாது துணிந்துநில் ஞாலம் உனது
வாடாமல் பற்றிநில் சிகரம் உனது
கருகாமல் உயிர்த்தெழு வானம் உனது.

வானத்தில் பறப்பேன் வானவில்லையும் பிடிப்பேன்
மலையின் மீதேறி முகட்டையும் கைக்கொள்வேன்
எனக்கென வாழ்வேன் என்னுள் ஒடுங்கமாட்டேன்
நம்பிக்கையின் கரம்பற்றி வாழும் வரம்பெறுவேன்.

எழுதியவர் : சுபாசுந்தர் (24-Apr-16, 6:23 pm)
Tanglish : vaazhum varam
பார்வை : 85

மேலே