புதுசா என்ன……

புதுசா என்ன…….

தாழ்பாள்
தன்னிச்சையாக சுதந்திரம் தேட
பல்லின சேர்க்கை
தரணியில் தாமதம் காணுது
மதயானை மதி நுட்பம்
பரவலாய் பயிர் செய்ய
பருகிய அன்பு
துறவு ஏற்கிறது
தூக்கில் தொங்கி……

குடிகள்
வாழவேண்டி வகுத்த பாடம்
விம்மி வியக்கியானம் காணுது !
இரவல் சாதனை
இருட்டரையில் இளைப்பார
இளசுகள் இதயகீதம் வேயுது
இதுவென்ன புதுசா என்ன !

இட்டப்படி கட்டி முடிக்க
கட்டிய கோட்டை
முத்திங்கள் போக
முழுப் பிரசவம் கண்டது !
வந்த வழி வழக்கு
அறம் இல்லா தாரம்
வாசல் வழி மறித்து
வாழ்த்தியவர் வாயடைக்க
வரும் துன்பம்
இனி தொடக்கம்
வாய்ப்புக்கு நன்றி !
இல்வாழ்க்கையில்
வாழ்க்கை இல் !

எழுதியவர் : மு.தருமராஜு (7-Mar-25, 12:32 pm)
பார்வை : 42

மேலே