வார்த்தைகளே வருவாயா
வலியை வரிகளில் கூற..
கூடி வருவதில்லை வார்த்தைகள்..
வலியில் விலகும் மனிதர் போல..
வலித்ததால் விலகியதோ வார்த்தைகள் கூட!
வலிமையான வார்த்தையின் மௌனம்..
வலியோடு என் வரிகளின் பயணம்..
மொழிக்கு ஏற்பட்டதோ பஞ்சம்?
மௌனத்தில் வார்த்தைகள் தஞ்சம்!
வார்த்தைகளில் வருத்தத்தை கூறினேன்..
வார்த்தையில் ஆறுதலும் தேடினேன்..
வராத வார்த்தைகளே விரைந்து வருவாயே
வலிகளை விலக்கி விடுதலை வழங்குவாயே!!

