முகநூல்

முகநூல் முகநூல் முகநூல்தான் - அது
மனம்விட்டுப் பேசிடும் அகநூல்தான்
ஓய்வாய் இருக்கும் நேரங்களில் - பொழுதை
ஓட்டிட உதவிடும் சுகநூல்தான்

முகநூல் என்கின்ற பெருங்கடலில் - நீ
மூழ்கியெடு நட்பு முத்துக்களை
உண்மையுடன் தினம் உரையாடி - நீ
உள்ளத்தில் போக்கிடு துயரங்களை

முன்பின் அறியாத மனிதர்களை - நம்
அன்பின் பிடியில் வசப்படுத்தும்
எத்தனையோ நல்ல செய்திகளை - அது
எல்லோருக்கும் தந்து குஷிபடுத்தும்

மனதில் தோன்றிடும் எண்ணங்களை - நாம்
மகிழ்ச்சியுடன் அதில் எழுதிடலாம்
மற்றவர் கூறும் கருத்துகளை - நாம்
மனநிறைவாய் அதில் படித்திடலாம்

அட்சய பாத்திரம் போலிருந்து - அது
அள்ளிதரும் பல நண்பர்களை
இணையற்ற தூதுவன் போலிருந்து - அது
இணைத்திடும் காதலர் இதயங்களை

விரல்கள் அசைக்கும் ஒருசொடுக்கில் - நம்
விருப்பத்தை பிறர்க்கு கூறிடலாம்
மறுநிமிடம் வரும் பதில்மூலம் - நம்
மனக்கருத்தை கொஞ்சம் மாற்றிடலாம்

பார்த்திட இயலாப் படங்களையும் - இதில்
பலரும் பகிர்ந்து தருவதனால்
நேரினில் சென்று பார்த்ததுபோல் - மன
நிறைவைத் தந்திடும் பலபேர்க்கும்

நாமும் முகநூல் தொடங்கிடுவோம் – அதில்
நல்லநல்ல செய்திகள் அறிந்திடுவோம்
எப்போதும் அதிலே மூழ்காமல் - நாம்
ஏற்றநேரம் கண்டு பார்த்திடுவோம்.

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : பாவலர். பாஸ்கரன் (24-Apr-16, 6:52 pm)
Tanglish : muganool
பார்வை : 58

மேலே