ஏனிந்த தாமதம் சொல்வாயோ சம்மதம்

தாவணி பெண்ணே! வருவதற்கு
தாமதமாவது ஏனோ?
உனப்பன் வந்து தடுத்தானோ?
உந்தாய் என்னைப் பழித்தாலோ?
ஏனிந்த தாமதம்? எப்போது
ஏறிவருவாய் என்வீட்டுபடி?

வாசலோரம் விழிவைத்தே
காலநேரம் காணாமலே
கோலமயில் நீ வருவதற்கே
காத்திருக்கின்றேன்; நீயோ
என்ன செய்து கொண்டிருக்கிறாயோ?
யார் உன்னை மறித்தாரோ?
யான் கெட்டவன் என்றுரைத்தாரோ?
ஏனிந்த தயக்கம்? முன்னே
ஏறிய கால்கள் தடுமாறியதோ?

சேலை சோலையே! எப்போது
சாலையில் வருவாயோ?
உன்னோடு கைகோர்த்து வாழ்நாள் முழுவதும்
நான் போக நீ வர வேண்டும் என்னோடு;
நெஞ்சம் துடிக்கிறது; உன் நினைவில்
பஞ்சமில்லாமல் நாளும் கடக்க,
வருத்தம் தரும் உன் தாமதம்,
திருத்துகிறது; உன்னை மேலும்
நேசிக்கத் தோன்றுகிறது;
உன் தாமதக் காரணத்தை யோசித்து, யோசித்து
பசியும் மறந்து விட்டது.
ஏனிந்த தாமதம்? என்னை காண
வரும் பாதையும் மறந்து போனதோ?

சாலைத் தென்றலே! உன்னைக் காணாத
சாலையெங்கும் வெறுமையாகுதே!
பயணிக்கும் போது வேதனை அடைகிறேனே!
பயணிப்பது எங்கே என்றறியாமலே!
கால்களும் நடக்குதே கூடவே வரையரையின்றி
காலமும் நகற்கிறதே! நரைமுடி தெரிகிறதே!
ஏனிந்த தாமதம்? எல்லாம் மறந்தாயோ? நினைவை இழந்தாயோ?

மலைத்தேனே! உன்னை பருக விழைந்தேனே!
கலைத்தேனே! காதல் தேன் கூட்டால் கவிழ்ந்தெனே!
பிழைத்தேனே! உன் நினைவில் சுவைத்தேனே!
களைத்தேனே! உன்னை காணாது மனம் சளைத்தேனே!
தேனமுதே! அருகே வா!
ஏனிந்த தாமதம்? சொல்லாயோ சம்மதம்?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Mar-25, 2:33 am)
பார்வை : 135

மேலே