மீன்வால் பொண்ணு

ஏண்டி கம்முலா (கம்லா, கமலா) உங்க மீன்வாலு பொண்ணு

எங்கடி போயிட்டா?


@@@@@@@

என்ன பாட்டி சொல்லறீங்க?

@@@@@@@@@@@

உங்க வீட்டில தான் மீன்வாலு பொண்ணு இருக்கிறதாக்


கேள்விப்பட்டு அவளைப் பாக்க வந்தேன்.


@@@@@@@@@@@@@@@@@


கதையில தான் மீன்வால் பெண் இருப்பதாய்ச் சொல்லுவாங்க.

வாழ்க்கையில் அதெல்லாம் அளவுக்கு மீறின கற்பனை.

@@@@@@@@@@@


அது சரிடி. உங்க பொண்ணுப் பேரு என்ன?

@@@@@

எங்க பொண்ணுப் பேரு 'பிஸ்வால்'.

@@@@@@@@@@

அந்தப் பேரை ஏன் உங்க பொண்ணுக்கு ஏன் வச்சீங்க?

@@@@@@@@@@@

ஒரு போட்டித் தேர்வு மாத இதழில் ஒரு பொண்ணோட பேரில்

இரண்டு சொற்கள். அந்த இந்திப் பேரு 'பிஸ்வால்'ன்னு முடியுது.

அந்தப் பேருக்கு என்ன அர்த்தமோ எங்களுக்குத் தெரியாது.

தன்மானமிக்க தமிழருக்கு அழகு அவுங்க பிள்ளைகளுக்கு

இந்திப் பேரை அல்லது இந்திப் பேரு மாதிரி உள்ள பேரை

வைக்கிறது தான். தமிழ்ப் பேரை வச்சா தமிழர்கள் யாரும்

நம்மள மதிக்கமாட்டாங்க.

@@@@@@@@@@@

நீ சொல்லறதும் சரிதாண்டி கம்முலா. ஆமாம் 'பிஸ்ஸு'ன்னா

மீனு. மீனுகூட வாலைச் சேர்த்தா 'பிஸ்வால்'. எதுக்குடி இந்தப்

பேரை வச்சீங்க?

@@@@@@@@

பாட்டி நீங்க சொல்லறது ஃபிஷ்(Fish). அது தான் மீன். எங்க

பொண்ணுப் பேரு

'ஃபிஸ்வால்' இல்ல. 'பிஸ்வால்' (Biswal)

@@@@@@@@@

ஆனா உங்க பொண்ணு பேரைக் கேள்விப்படறவங்க

'மீன்வால்'ன்னு தான் சொல்லுவாவ்ங்கடி கம்முலா.

எழுதியவர் : மலர் (16-Aug-25, 2:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 27

மேலே