எழுதாக் கவிதையே

வெட்டும் விழியால் வியப்புமழை பொழிகின்றாய்
சுட்டும் மொழியால் சுகராகம் இசைக்கின்றாய்
கொட்டும் அருவியாய் கோலோச்சும் உன்னெழிலை
பட்டென என்வடிவில் பாட்டாய்ச்
சொல்ல
பிட்டின் தெங்காய் பிரியமுடன் இணைந்து
ஒட்டி உறவாட ஒவ்வாமல் என்கவிக்
கட்டுக்குள் விலகிஏனடீ கனதூரம்
செல்கின்றாய்

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (16-Aug-25, 12:02 pm)
பார்வை : 110

மேலே