மெல்லிடையே மெல்லவா நீ

மல்லிகை பூவெலாம் மௌனமாய் புன்னகைக்க
சில்லென்ற காற்றினில் செவ்விளநீர் ஆடிட
நில்லாநீ ரோடையுனை நின்றுநின்று பார்த்திட
தொல்காப் பியத்தமிழ்த் தென்றல் இளம்பரிசாய்
மெல்லிய மேற்குவான் மின்னல் விழியேந்தி
மெல்லிடையே மெல்லவா நீ

-----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிவரை
ஒரு விகற்பம் அல்லது பல விகற்பத்தில்
எழுதப்படுவது
ஈரடி வெண்பா குறட்பா
மூவடியில் சிந்தியல் வெண்பா
நாலடி வெண்பா அளவடி வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-25, 9:26 am)
பார்வை : 67

மேலே