சொ பாஸ்கரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சொ பாஸ்கரன் |
இடம் | : விளந்தை ஆண்டிமடம் |
பிறந்த தேதி | : 04-Jun-1965 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 275 |
புள்ளி | : 371 |
நான் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறேன். எனது ஊர் விளந்தை
ஆண்டிமடம்.
நிவர் புயல்
நிவரே நிவரே கரைந்துவிடு- நீ
நில்லாது கரையை கடந்து விடு
வேண்டாம் வேண்டாம் பெருவீச்சு - உன்
வேகம்தணி அது உயிர்மூச்சு
மெல்லிய நிலையில் தென்றல்நீ - அது
மேவிடும் போதினில் இன்பம் நீ
வல்லினம் விடுத்து நீ வந்தால் - உன்
வரவது என்றும் வளமேதான்
ஏழைகள் குடிசைகள் தகர்ப்பதிலே - நீ
என்னதான் இதத்தை கண்டிடுவாய்
இங்குள்ள மரங்களை சாய்ப்பதிலே - உன்
இதயத்தில் என்னென்ன நிறைகொள்வாய்
வயல்வாழ் வாழைகள் சாய்க்காதே - இங்கு
வளர்ந்துள்ள தென்னையை மாய்க்காதே
கோரத் தாண்டவம் நீஆடி- பெரும்
கொத்தாய் உயிர்களை பறிக்காதே
அனைத்தும் உந்தன் குழந்தைகளே- இதை
அறி
மாணவ மணியே கொஞ்சம்நில் - உன்
மனதில் சொல்வதை நிறுத்திக்கொள்
ஆணவம் இல்லா நெஞ்சம்கொள் - அதில்
அறத்தையும் நிலையாய் நிறுத்திகொள்
கல்வியை கற்கும் காலத்தில் - உன்
கவனத்தை எதிலும் செலுத்தாதே!
செல்வம் அதுபோல் பிறிதில்லை - அதை
செறிவாய் கற்க மலைக்காதே!
விழுந்திடும் எழுந்திடும் கடலைகள் - உனை
அழுத்திட துடிக்கும் பலதடைகள்
உறுதியும் திடமும் மனம்கொண்டு - நீ
சறுக்கி விழாமல் பாடுபடு
கேடுகள் செய்திடும் உறவுகளை - நீ
கிள்ளி எறிந்திட தயங்காதே!
வாடிடும் ஏழையின்
பள்ளியில் பயிலும் மாணவனே! – தினம்
துள்ளித் திரிந்திடும் தூதுவனே
நாளைய தேசத்தின் நாயகனே – அதி
காலையின் கதிரென வந்தவனே!
பொழுதை வீணாய் கழிக்காதே! – பல
பொன்னான வாய்ப்பை இழக்காதே!
எல்லாம் சரியாய் உனக்கிருந்தும் – நீ
ஏமாந்து பின்னாளில் வருந்தாதே!
மூளையின் பலமே முதல்பலமாம் – அது
முன்னேற்றப் பாதையின் அடித்தளமாம்
நாளையும் பொழுதையும் உனதாக்கி – நல்ல
நம்பிக்கை கொள்வது பெரும்பலமாம்
நெற்றியின் வியர்வை பலபேர்க்கு – இங்கு
வெற்றியை தந்தது தெரியாதா?
நித்திரை மறந்து உழைத்தோரே – நம்
நிலத்தை ஆண்டனர் புரியாதா?
நெருப்பு மலையின் சிகரம்நீ –
சின்னக் கண்ணா இங்கேவா!
சின்னக் கண்ணா இங்கேவா - நீ
சிரித்து மகிழ்ந்து அன்பைதா
உலகம் முழுதும் உன்சொந்தம் - உன்
உள்ளத்தில் வேண்டாம் தீப்பந்தம்
சாக்கடை புழுவாய் கிடக்காமல் - ஒரு
சரித்திரம் படைக்க புறப்படுவாய்
மாக்கடல் அலைகளும் உன்முன்னே - வந்து
மண்டி இடும்படி செய்திடுவாய்
கைகால் முடக்கி கிடந்தாலே - எந்த
காரியம் நீயும் சாதிப்பாய்
காலடி எடுத்து முன்வைத்தால் - உன்
கோலம் மாறிடும் கவனிப்பாய்
எறும்பும் ஈயும் சிறியவைதான் - அதன்
சுறுசுறுப்பை
எரிமலை நிகர்த்த இளையவனே – நீ
இன்னும் ஏனிங்கு உறங்குகிறாய்
கடமைகள் கோடி கிடக்கையிலே – உன்
கண்மூடி எதற்கு பதுங்குகிறாய்?
ஒன்றும் என்னிடம் இல்லையென – நீ
உளறித் திரிவது சரிதானா?
வென்றிட வையகம் இருக்கையிலே – நீ
வேதனை கொள்வது முறைதானா?
பாறையில் ஒன்றும் விளையாது - நீ
படுத்தே கிடந்தால் வாழ்வேது
மாலையின் பரிதியில் சூடேது – நீ
மலைத்தால் வெற்றியும் தீண்டாது
கால்கள் இரண்டையும் முன்னெடுத்து – நீ
கடலலை போன்று புறப்படு
தடுத்திடும் தடைகளை தவிடாக்கி – இந்த
தரணிக்கு யாரென காட்டிடு
ப
திருநங்கை
ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை
முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது
நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி
கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்
கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை
முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு
பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த
நாட்டில்பல நன்மைகள் நடந்த தெல்லாம்
---------நாள்தோறும் எழுந்தபல கேள்வி யாலே
பூட்டிவைத்த கேள்விகளால் விளைவ தென்ன?
--------பூமியிலே மாற்றமில்லை கேள்வி இன்றி
வாட்டுகின்ற வேதனைகள் விலகிச் செல்ல
-------- வினவுகின்ற கேள்வியில்தான் விடைகள் கிட்டும்
மாட்டுகின்றார் கயவர்பலர் உலக மெங்கும்
----------மதிநிறைந்த கேள்விபல கேட்ப தாலே
விடைகிட்டும் கேள்விகள்கேள் என்று சொன்னார்
-----விண்ணுலகம் சென்றுவிட்ட சாக்ரட் டீசும்
உடையினிலே கருப்பணிந்த வைக்கம் வீரர்
------ உள்ளத்தில் மாற்றம்வர வினவச் சொ
விரைந்து செல்லும்
கார்மேகமெல்லாம்
நிலம்தனை நனைத்துச்
செல்வதைப் போல உன்
பார்வை மழை சிறிதே
என்னையும் நனைக்கிறது!
ஒவ்வொரு நாளும்
என் வீட்டு ஜன்னல்களை
திறக்கும்போது
புன்னகைக்கின்றாய்
தோட்டத்து
ரோஜாவாயிருந்து!
என் இதய
சாம்ராஜ்யத்தில்
முடிசூடா ராணி
நீ!நீ!நீ!
என் இதய ராகங்கள்
யாவும் வீணையாகிய
உன்னிடமிருந்து
மீட்கப்பட்டவைதான்!
நீயில்லாத அத்தனை
இரவுகளையும்
கழித்திருக்கிறேன் ஆனால்
அந்த ஒருபகல்தனை
கழித்திட இயலாதவனாய்
இருப்பேன்!உனது
விடுமுறை நாட்களின் போது!
நண்பர்கள் (103)

யாழ்வேந்தன்
திருவண்ணாமலை

கௌடில்யன்
சென்னை

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்
