திருநங்கை
![](https://eluthu.com/images/loading.gif)
திருநங்கை
ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை
முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது
நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி
கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்
கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை
முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு
பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த பச்சைத் துரோகம்
திறமை பற்பல இருந்த போதும் – இந்த
தேசத்தின் கேலியால் ஆகிடும் சேதம்
அல்லும் பகலும் இணைந்தால் அந்தி - இது
அள்ளிப் புசித்திட இயலாப் பந்தி
அர்த்த நாரியே ஆண்பெண் இணைப்பு – அந்த
ஆண்டவன் படைப்பை போற்றுவோம் பொறுத்து.
பாவலர். பாஸ்கரன்