ஆட்டிக்கொண்டே இரு
ஆட்டிக்கொண்டே இரு.
02 / 04 / 2025
இதயம் துடிக்கிறவரைதான் - உன்
துடிப்பும் துள்ளலும்
ரத்தம் ஓடுறவரைதான் - உன்
ஓட்டமும் நடையும்
மூளை சிந்திக்கிறவரைதான் - உன்
கவிதையும் கட்டுரையும்
கையில் இருக்கிறவரைதான் - உன்
சொத்தும் சுகமும்
பையில் இருக்கிறவரைதான் - உன்
பட்டமும் பதவியும்
உலகம் இயங்கிறவரைதான் - உன்
உயிர்ப்பும் உறவுகளும்
உயிர் இருக்கிறவரைதான் - உன்
உயர்வும் தாழ்வும்
இயக்கம் இருக்கிறவரைதான் - எல்லா
லாபமும் நஷ்டமும்
சிந்தித்துப்பார்
நண்பா...!
இயக்கம் இல்லையென்றால் - நீ
வெறும் பூஜ்ஜியம் ஆகிவிடுவாய்
ஓடிக்கொண்டே இரு - காலை
ஆட்டிக்கொண்டே இரு.