ஒன்றும் வராது
ஒன்றும் வராது !
கபோதிகளின்
துணைக்கோலம்
கக்கிய கசடுகள்
கலங்கரை விளக்கை
சிறை படுத்த
மயங்கியது கற்ற கல்வி !
தப்பித்த
தவளைகள்
நீர் தடாகம் தேட
தேவையில்லையாம் !
அவரசர பிரகடனம்
துண்டு பிரசுரம்
துணையிருக்க …..
துவக்க வேலையை
துணிச்சலோடு
துதிபாடி
தொண்டு செய் !
துணிந்து செய் !
பணிந்தவனுக்கு துக்கமில்லை
துணிந்தவனுக்கு
தூக்கம் இனி தேவையில்லை !
தலைவன்
நான் இருக்கேன் !
உனக்கு ஒன்றும் வராது ….
கேடு எதுவும் !
நான் இருக்கையில் அமர..
அதற்கு அர்ப்பணிப்பு
உனது விருப்பம் !
உன்னிடம் இருப்பதை
செலவிடு !
கொடுப்பது உனதாக இருக்க
எடுப்பது எனதாகும் ..
எல்லாம் !
வாசல் கதவு திறக்க
காவலாளி கடைக்கண்
தேர்வு தேவை…
விருந்தினர் பட்டியலில்
இப்போவே…
பதிந்து வைத்துக்கொள் !
எதிலும் சுயநலம் வேண்டும்
மறதி நல்லதை
சூரையாடிவிடும் !
அதை மட்டும்
வாக்குப் படி செய்திடவும்
எனது வருங்காலம் சிறக்க
வாய்க்கும் வாய்ப்பு
ஏற்றிவிடும் முதலில் என்னை
பிறகு உன்னை
நினைத்துப் பார்க்க …..
நினைப்பில் இருந்தால் !
பிறகு பார்ப்போம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
