கொண்ட மணியம்
பிசி மணியம் : பிச்சாண்டி ! வந்த நாலலிருந்து எதிர் வீட்டல சண்ட மயமாவே இருக்கிறது தெரியுமா …
யேண்டா இங்க வீடுமாறி வந்தேன்னு போச்சு !
பிச்சாண்டி : தெரியாம தான் கேக்கரன்…..இந்த யுனிட்டிக்கு நீ வாடகெக்கி வரத்துக்கு முன்ன…காலியா
ரொம்ப நாளா இருந்திச்சு …அது தெரிஞ்சி தான நீயும் வந்தெ….ஆமா..உன்ன எல்லாரும்
கொண்ட மணியும்மு தான கூப்படராங்க பழைய பிலெட்டல..அப்பரம் எப்படி பிசி
மணியம்னு மாத்தி வெச்சிகிட்ட
பிசிமணியம் : அதுவா..முன்ன கோண்டோவல குடி இருந்தென்…இப்ப பிசியா புரோக்கர் வேல
பண்றன்ல..அதான்….பிசின்னு மாதிக்கிட்டென்….பொலெக்க தெரியுனும்ல….
பிச்சாண்டி :..மறந்தராம முடியெ கொஞ்சம் வெட்டிக்கிட்டியா கொண்ட கம்மியா தெரியும்……பழைய
பேரூகூட மரெஞ்சி போயிடும் !
பிசி மணியம் : நல்லா சொன்ன பிச்சாண்டி !