தந்தையின் தாலாட்டு
பூப்போன்ற மகளே
பொன்வண்ணச் சிலையே
தேன்போல இனிக்கும்
தெம்மாங்கு பாட்டே
விழியோரம் நான் கண்ட கனவு - அதன்
விடையாக நீ வந்த வரவு.
மொழியெல்லாம் தமிழ்போல இனிப்பு - எந்தன்
வழியெல்லாம் நிறையும் உன் நினைப்பு.
கண்ணே நீ கண்மூடி தூங்கு - எந்தன்
தோள்மீது தலை சாய்த்து தூங்கு
தாயாக எனை மாற்றும் பெண்ணே - எந்தன்
தாயாக உனை காப்பேன் கண்ணே