காதல் செய்வீர்

காதல் செய்வீர்!
==========================================ருத்ரா

"ஆதலினால் காதல் செய்வீர்"
என்றான்
அந்த முண்டாசுக்கவிஞன்
மீசை முறுக்கி.
"எங்கே காதல் செய்யுங்கள்
பார்க்கலாம்?"
என்றான்
முண்டாசு கட்டிய‌
மீசை முறுக்கிய‌
சாதித்தலைவன்
கையில் வீச்சரிவாளோடு!

============================================

எழுதியவர் : ருத்ரா (19-Aug-18, 4:37 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kaadhal seiveer
பார்வை : 86

மேலே