மகாத்மா காந்தி - சுதந்திரம்

வேண்டுமய்யா சுதந்திரம்?!
வேண்டுமய்யா சுதந்திரம்?!

சொந்த மண்ணிலே அடிமையானோம்!
சொர்க்கம் கண்ட பூமியிலே அடிமையானோம்!

மூச்சுக் காற்று விடக் கூட
முடியவில்லையே எம் தேசத்தில்!

காத்திருந்து காத்திருந்து கவலைகளைக் கொண்டு
கண்கள் சுருங்கினோம்!

மண்டியிட்ட வாழ்க்கையிலே
மாண்டுவிடத் தயாரானோம்!

கைக்கொடுக்க யாருமில்லை
சோகங்கள் மட்டும் குறையவில்லை!

ஏங்கித் தவித்தோம் பாரதத் தாயே!
கைக் கொடுக்க வருவாய் நீயே!

தன்னையே நாட்டுக்கு அர்ப்பணிக்க
தன்னலம் இல்லா தலைவர் கிடைக்க!

அவர்தான் மகாத்மா காந்தி!
பாரதத் தேசத்திற்கு கிடைத்தது நீதி!

போராட்டம் என்றால் கலவரமா?!
மாற்றம் வேண்டும் பொதுநலமா?!

அகிம்சை வழியில் போராட்டம்!
அதுவே மக்களின் உயிரோட்டம்!

ஆண்டுகள் கடந்து போராடினோம்!
சுதந்திரத் தாகத்தைப் பருகினோம்!

வாழவேண்டும் பாரத மண்ணிலே!
பாரதம் புகழ் பெறவேண்டும் பார் உலகிலே!

எழுதியவர் : உஷாராணி (19-Aug-18, 5:17 pm)
பார்வை : 246

மேலே