காதல் சொன்ன நிமிடங்கள்

பூவான பெண்ணின்
புன்னகையில் மெய்மறந்தே //1
பூக்களைக் கொடுத்தே
கண்ணசைவில் மெய்சிலிர்த்தேன் //2
நித்தமும் சந்தித்து
நெடுநாளாய் பழகினாலும் //3
காதலா இல்லை
கனிவான பேச்சா //4
என்றறியாமல் காதல்
சொன்ன நிமிடங்கள் //5
இதயம் படபடவென்று
அடித்துமே வியர்த்ததுவே // 6
என்னையும் அச்சத்தில்
ஏதேதோ செய்ததுவே //7
காதலைப் பரிமாறிக்
கயல்விழியும் முத்தமிட்டே //8
இனிய வாழ்க்கை
இன்பமாய் மலர்ந்திடவே //9
இருவரும் பேசியே
இணைந்து மகிழ்ந்தோமே //10
கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (30-Mar-25, 1:33 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 64

மேலே