விலை போகா

விலை போகா


விவசாயி
விளைச்சலை
விலைபேச தெரியுது
ஆனால்
அவன் பட்ட துன்பத்தை
கேட்க நாதியில்லை !

நல்ல தரமா
பிடித்து பார்க்க
நையாண்டி வார்த்தை
துடிக்கிறது
எலும்பில்லா நாக்கு !

கேட்டது ஒரு புறமிருக்க
பிடித்து வைத்த மீதக் காசு
சொறுகின பொழுது
ஓட்டைவழி கீழே விழுந்தது
தெரியாது போனது…..ஏனோ !
சதைப்பிடிப்பு
கண்டு கொள்ளவில்லை …!

அது !
அவன் செயல் கிடையாது
இயற்கையின்
ஊடுறுவல் வன்மையாய்
நாழிகை கழித்து
தேடும் போது உணர்த்த
கருமத்தின் கூலி நின்று
வரவில் வைக்கிறது
ஞாபகச் சுழற்சி
தன் கடன் சிறக்க !

எது நடக்க வேண்டுமோ
அது அது இஸ்டத்திற்கு
நடக்கிறது
என்பது தப்பு !
எது எப்படி நடக்க வேண்டும்
என நினைத்தல் இருக்க
நல்லது நடக்க
நல்ல விதையை
தேர்வு செய்தல் வேண்டி
விவசாயியை அணுக வேண்டும்…..
விற்பனைக்கு வந்த பிறகு
கேள்வி பட்டியலை எதிர்கொள்ள
விவசாயிக்கு அவகாசம் கிடையாது..
காரணம்
அவனுடைய வியர்வை
விலை போகா….
படைத்தவனுக்கே நைவேதியம்
இவன் தயவு தானே !

எழுதியவர் : மு.தருமராஜு (29-Mar-25, 3:08 pm)
பார்வை : 15

மேலே