PREVIOUS NEXT என்பதின் தமிழ் முந்தைய அடுத்த
முந்தைய எதிர்ச் சொல் பிந்தைய ---அடுத்த என்ற பொருள் தராது
முன்னது பின்னது
முன் படைப்பு அடுத்த படைப்பு என்று எழுதலாம் .
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரீகர் ----பழைய சொல்லாட்சி .
முந்தைய என்பதிலிருந்தும் சாலச் சிறந்த சரியான தமிழ்ச் சொல் இருக்க முடியுமா ? தமிழ் சொல் --சந்திப்பிழை
திருத்தவும். 02-Apr-2018 10:37 pm
எனக்கு இலக்கண வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை.
நிலை மொழி முதல் எழுத்து நெடிலாக இருப்பதாலும், வருமொழி முதல் எழுத்து உயிரெழுத்தாக இருப்பதாலும் ஒற்றெழுத்து வராது.
கல் + எங்கே = கல்லெங்கே
கால் + எங்கே = காலெங்கே
கண் + அழகு = கண்ணழகு
காண் + அழகு = காணழகு 03-Apr-2018 12:39 am
1 .அருமை . உங்களுடன் உரையாடல் மகிழ்ச்சி தருகிறது. சிறந்த தமிழ்ப் படிப்பாளி நீங்கள்.
தற்சம தற்பவ விதிப்படி பல சமிஸ்கிருதச் சொற்கள் தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது .நீங்கள் அறிவீர்கள் ,
ல கர ட கர ர கர எழுத்தை முதலாகக் கொண்டு தமிழில் சொல் துவங்காது .
இலங்கை இலக்குவன் இலட்சியம் என்றுதான் எழுத வேண்டும் அது போல் இராமன் இராஜா . இந்த இ க்கு பலுக்கல் கிடையாது என்று நினைக்கிறேன்.
இலக்கணம் ,இலக்கியம் இப்படித்தான் உருவானது.
இந்த இயம் இங்கே இருந்துதான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன் .
2 . பாரதம் முழுதும் பாரத மாதா என்று உருவாக்கப் படுத்தியபின் பாரதத் தந்தையே என்று எப்படிப் பாடுவான் ?
ஆணாயிருந்தும் தன்னைக் காதலியாகப் பாவித்து கண்ணன் என் காதலன் என்று பாடவில்லையா ?
3 . உங்கள் பதில் சிறப்பு
அது மட்டுமா கற்பென்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் என்று வைப்போம் என்று முழங்கியவனும் பாரதிதானே !
மிக்க மகிழ்ச்சி நன்றி கவிப்பிரிய கோகிலா மகன் . 31-Mar-2018 7:29 pm
நன்றி நண்பரே
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1 "இலக்கணத்தை மீறிய சொல் இருக்கக் கூடாதா ?"'
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இருக்கலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என்னும் நம்பிக்கை கொண்டவன் .
சுவை மிக்க , சிறப்பான , புதிய சொற்களை ஏற்றுக் கொள்ளுவதற்கு வழுவமைதி என்ற இலக்கணக் கூறு இருக்கையில் அதை நாம் பயன்படுத்திக் கொண்டு மொழிக்கு வளம் சேர்ப்பதில் எந்தத் தவறுமில்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2 . தாய் நாடுன்னு சொல்லாம எங்கள் தந்தையர் நாடெனும் பேச்சினினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்று பாரதியார் ஏன் சொன்னாரு ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கேள்விக்கு எனது எதிர்க் கேள்விகள்
1 ." செப்பு மொழி பதினெட்டுடையாள் " என்று ஏன் சொன்னார் ?
2 ." தாயின் மணிக்கொடி பாரீர் ""என்று ஏன் சொன்னார்?
3 "பாரதப் பிதா திருப்பள்ளியெழுச்சி" பாடாமல் ""பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி"" என்று ஏன் பாடினார்?
4 . "காளையர் சூழ்ந்த தமிழ்நாடு " என்று பாடாமல் " கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு "" என்று ஏன் பாடினார் ?
இன்னும் பல "" ஏன் "" களை பாரதியார் பாடல்களில் இருந்தே கேட்க முடியும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3 .பாரதியார் மூலம் ஆண் உயர்வு என்று காட்டி விட்டேனா ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிகபட்சமாக, பெண்ணுக்குச் சமமாகத் தான் ஆணைக் கருதினார் பாரதியார் என்று வைத்துக்
கொள்ளலாமே தவிர பெண்ணை விட ஆண் உயர்வு என்று அவர் கருதியதாக வைத்துக் கொள்ள வழியேயில்லை.
31-Mar-2018 6:43 pm
உன்னை நீ அறிந்து கொண்டால்
உண்மை அங்கு கண்முன்னே நிற்கும்
உண்மைதான் பெருமாள்
வந்தா நாராயணன் ............
நல்ல கருத்துள்ள பாடல் நண்பரே
இன்னும் எழுதுங்கள் 22-Jun-2017 2:43 pm