Shyamala Rajasekar - சுயவிவரம்
(Profile)
நடுநிலையாளர்
இயற்பெயர் | : Shyamala Rajasekar |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 23-Nov-1960 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 11614 |
புள்ளி | : 7712 |
இரவும் பகலும் இனியவள் நினைவே
பிரிவிலு முறவைப் பேணத் துடிக்கும்
ஏற்றத் தாழ்வுக ளெதுவந் தாலும்
தூற்றாது போற்றித் துயர்தணி விப்பேன் !
உள்ளும் புறமு முன்ற னன்பால்
துள்ளினும் துவண்டேன் சுகம்பெற விழைந்தேன் !
இருளி லொளியாய் இதயம் மலர்ந்தே
மருந்தாய் விருந்தாய் மகிழ்விப் பேனே !!
சியாமளா ராஜசேகர்
இதழகல் நேரிசை அகவல்....!!!
நின்னை நினைத்தே நின்றே னிங்கே
தென்னங் கீற்றில் தென்றல் காற்றாய்
அழகே சிலையே அழைத்த கணத்தில்
எழிலிடை யாட இழைந்த இசையாய்
அங்கயற் கண்ணியே அங்கே
தங்கத் தேராய்த் தங்கி னாலென்?
சியாமளா ராஜசேகர்
இதழொட்டும் நிலைமண்டில ஆசிரியப்பா ....!!!
வளியாய் வருடும் மனத்தை மயக்கும்
களைப்பை விரட்டும் கவலை தீர்க்கும்
மழலை என்னும் மங்காச் செல்வம்
மழைபோல் பொழியும் வற்றா இன்பம்
வீட்டில் பெருகிட விளையும் சுகத்தைப்
பாட்டில் விதைத்தேன் பாசத் தோடே!!
சியாமளா ராஜசேகர்
விடியலைப் போற்றி பொழிப்பெதுகை அமைந்த நிலைமண்டில ஆசிரியப்பா !!
****************************************************************
இரவில் சூழ்ந்த இருளை விரட்டக்
கருணை யுடனே கரங்கள் நீட்டி
ஒளியால் மெழுகி உளமது வியக்கக்
களையாய்க் கிழக்கில் களிப்புட னெழுந்தாய் !
உயிர்கள் வாழ்வில் உயர்வை யெட்டத்
தயக்க மின்றி தயைநீ புரிந்தாய் !
ஓயுமோ நின்பணி? ஓயா துழைக்கும்
நாயக! வானொளிர் ஞாயிறே வாழியே!!
சியாமளா ராஜசேகர்
ஓம்பும் உயர்ந்தோர் உரைத்திடும் நல்மொழி ஊக்கந்தரும்
தேம்பல் விடுத்துநீ தேறிட தைரியம் சேர்ந்துவரும்
சூம்பிக் குமைவதில் சோர்வு மிகுந்திடும் சுந்தரனே
சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே !
( இலந்தையார் தந்த ஈற்றடிக்கு எழுதிய கட்டளைக் கலித்துறை )-
கற்றோரும் மற்றோரும் எளிதாக விளங்குவண்ணம்
கவியரசா நீவடித்தாய் பாட்டு !
காற்றோடு கலந்தினிக்கும் காலமெல்லாம் புகழ்கூட்டும்
கண்ணதாசா உனக்கில்லை மாற்று !!
சொற்சுவையும் பொருட்சுவையும் நயங்கொஞ்சும் எழில்நடையும்
துள்ளிவரு மின்சந்தத் தோடு
சுகமாக நெஞ்சள்ள சோகத்தை யும்மறந்து
சொக்கித்தான் போகிறோமே கேட்டு !!
வற்றாத ஊற்றாக வளமான தத்துவங்கள்
வாழ்விற்கு நல்லவழி காட்டும் !
மனநோய்க்கு மருந்தாக உறவாட விருந்தாக
மயிலிறகாய் வருடித்தா லாட்டும் !!
முற்றாத இளமையொடு குன்றாத பொலிவோடு
முத்தாக ஒளிவீசி மின்னும் !
முப்போதும் தப்பாமல் திக்கெட்டும் ஒலித்திருக்கும்
முத்தையா நின்பாக்கள் என்றும் !!
தெவிட்டாத பா
அன்பெனும் கல் அடுக்கி
ஆசை எனும் கலவை பூசி
இன்பம் எனும் இல்லமாக்கி
ஈடில்லா நேசத்துடன்
உண்மை நெறி காத்து
ஊர்மெச்ச பேர் எடுத்து
எட்டுத்திக்கும் புகழ் பரப்பி
ஏற்றமிகு புதுமனைபுகுவிழாவில்
ஐந்து பூதங்களும் சேர்ந்து வாழ்த்த
ஒற்றுமையாய் பெருமை சேர்த்து
ஓசையின்றி சாதனை படைத்து
ஔவைமொழி கடைபிடித்து ஆனந்தமாய் வாழ்க !
முப்பெருந்தேவியர் கொலுவிருக்க
மும்மூர்த்திகள் அருள் மழை பொழிய
முப்பத்து முக்கோடி தேவர்களும்
முன்னின்று வாழ்த்துரைக்க
முயற்சிகள் யாவிலும் வெற்றிகள் குவித்து
முத்தமிழ்போல் நிறைவாக வாழ்க ...!! வளர்க ...!!
ஈன்ற தாயின் கருணையினால்
இந்த மண்ணில் பிறப்பெடுத்தோம் !
நான்தான் என்ற ஆணவத்தில்
நாளு முழன்று திரிகின்றோம் !
ஆன்றோர் வகுத்த வழியினிலே
அகந்தை யின்றி நடைபோட்டு
வான்போல் பரந்த உளத்தோடு
வாழ்ந்தால் வாழ்வு வரமாகும் !!
செருக்கை விரட்டி அன்பாலே
தெளிந்த அறிவைப் பெறவேண்டும் !
பெருமை மிக்க பண்பாட்டைப்
பேறென் றெண்ணிக் காக்கவேண்டும் !
வருத்தம் நீக்கும் வகையுணர்ந்து
வாட்டம் தணிவித் திடவேண்டும் !
இருக்கும் வரையில் இல்லாருக்(கு)
இயன்ற உதவி செயவேண்டும் !
கூட்டிக் கழித்துப் பார்த்திட்டால்
கூற்றன் வந்து நமையழைக்கப்
பூட்டி வைத்த பொன்பொருளும்
புரிதல் மிக்க உறவுகளும்
கூட்டை விடுத்துப் போகையிலே
கூடத் துணை
சந்தக் குழிப்பு
******************
தந்தன தானா தந்தன தானா
தந்தன தானா . . . . தனதானா
என்கன வேவா மஞ்சுள மேவா
என்துணை நீயே . . . . உணராயோ ?
இன்றுனை நேராய் நெஞ்சொடு சேயாய்
இன்புடன் கையா . . . . லணைவேனோ ?
தென்றலி னூடே சென்றிடு வாயோ
செங்கதிர் மேலே . . . . வருவேளை !
தெங்கிள நீராய் வண்டமி ழைநான்
சிந்திட வேநீ . . . . இளகாயோ ??
அன்பொடு தாராய் பஞ்சணை மேலே
அஞ்சிட லாமோ . . . . அழகேசொல் !
அந்தமி ழாலே பொங்கிடும் பாவாய்
அங்கயல் மீனாம் . . . . விழியாளே !
கண்டத னாலே கொஞ்சிட லாமா
கண்குளிர் வாயோ . . . . கனிவோடே !
கம்பனின் தோழா என்றெனை நீயே
கந்தளம் போலே . . . . ஒளிர்வேனே ...!!
கஞ்ச முகத்தழகும் கன்னக் குழியழகும்
***கன்னல் மொழியழகும் கற்றைக் குழலழகும்
கொஞ்சும் குரலழகும் கொவ்வை இதழழகும்
***கொண்டை மலரழகும் கொய்யாக் கனியழகும்
இஞ்சி இடுப்பழகும் இன்பக் கவியழகும்
***இல்லா இடையழகும் எஃகு மனத்தழகும்
வஞ்சி வடிவழகும் வண்ண நகத்தழகும்
***வட்ட பொட்டழகும் வண்டு விழியழகும்
வெண்டை விரலழகும் வெட்கப் படுமழகும்
***வெல்லப் பேச்சழகும் வெற்றித் திமிரழகும்
தண்டை ஒலியழகும் சங்கு கழுத்தழகும்
***தங்க வளையழகும் தந்த நிறத்தழகும்
பெண்மை மிகுவழகும் பின்னல் சடையழகும்
***பிச்சி மணத்தழகும் பெய்யும் இசையழகும்
வண்ண வுடையழகும் வங்கி வளைவழகும்
***மங்கை மடியழகும் மங்கா முகத்தழகும்
இயற்கைவளம் நிறைந்தமலை பறம்புமலை அம்மே
***இனியவனாம் வேள்பாரி ஆண்டமலை அம்மே !
அயர்வின்றி உழைக்குமக்க ளுள்ளமலை அம்மே
***ஔவைமுதல் பலர்பாடும் அழகுமலை அம்மே !
நயமான மூங்கில்நெல் விளையுமலை அம்மே
***நற்சுவையாம் பனிச்சுனைநீர் கொண்டமலை அம்மே !
வியக்கவைக்கும் தேனடைகள் மிகுந்தமலை அம்மே
***வேர்ப்பலாக்கள் மணம்பரப்பி யீர்க்குமலை அம்மே !!
நாட்டுமக்கள் நலமொன்றே நெஞ்சத்தில் கொண்டோன்
***நாடிவந்தோர்க் கில்லையென்று சொல்லாமல் கொடுப்போன் !
கேட்பவர்க்குக் கேட்டவற்றை உடனளிக்கும் செம்மல்
***கிஞ்சித்தும் மறுத்தறியாப் பாரியென்ற வள்ளல் !
கோட்டைக்குள் இருந்துகொண்டே மூவேந்த ரோடு
***குன்றாமல் முற்றுகையை எத
சேனியம்மன் கொலுவிருக்கும் அழகியகற் கோட்டம்
***சீர்மிகவே அமைந்திருக்கும் சிங்காரத் தோட்டம் !
வானிலொளிர் வெண்மதியாய் அன்னையவள் தோற்றம்
***வற்றாத கருணையினால் வாழ்வில்வரும் மாற்றம் !
தேனினிய சொல்லெடுத்துப் பக்தியுடன் பாடத்
***தேவியவள் குளிர்ந்துநம்மை ஆட்கொள்வாள் மெல்ல !
நானிலத்தில் நல்லவழி காட்டிடுவாள் என்றும்
***நம்பிடுவோர் குறைகளையத் துணைவருவாள் நன்றே !!
அன்னரத மீதேறி ஆனந்த மாக
***அண்டுவார்தம் உள்ளத்தில் குடியிருக்க வருவாள் !
புன்னகையில் முத்தொளிர ஒய்யார மாகப்
***பூரிப்பில் தனைமறந்து பொலிவோடு வருவாள் !
கண்ணாடி வளையோசை கலகலவென் றொலிக்கக்
***கனிவாக அணைத்திடவே களமிறங்கி வருவாள