மங்காச் செல்வம்

இதழொட்டும் நிலைமண்டில ஆசிரியப்பா ....!!!

வளியாய் வருடும் மனத்தை மயக்கும்
களைப்பை விரட்டும் கவலை தீர்க்கும்
மழலை என்னும் மங்காச் செல்வம்
மழைபோல் பொழியும் வற்றா இன்பம்
வீட்டில் பெருகிட விளையும் சுகத்தைப்
பாட்டில் விதைத்தேன் பாசத் தோடே!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Mar-21, 6:47 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 49

மேலே