இதழகல் நேரிசை அகவல்

இதழகல் நேரிசை அகவல்....!!!

நின்னை நினைத்தே நின்றே னிங்கே
தென்னங் கீற்றில் தென்றல் காற்றாய்
அழகே சிலையே அழைத்த கணத்தில்
எழிலிடை யாட இழைந்த இசையாய்
அங்கயற் கண்ணியே அங்கே
தங்கத் தேராய்த் தங்கி னாலென்?

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Mar-21, 6:50 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 21

மேலே