முதல் நாள் பள்ளியறை

வெற்றிச் சிகரம் தொட
எந்தேவதை
அகரம் தொட துவங்கும்
இந்நாளில்
அன்னை மடி விழகி
அறிவுக்காய் அடியெடுக்கும்
மகத்தான தருணத்தில்
சீராய் கல்வியினை
உயரிய ஆசான் வழிகாட்ட
சரியாய் தேரந்தெடுத்த
பள்ளித் தோழைமைகளுடன்
பல்கலையும் கற்று
பெரும் நிலைகள் பெற்று
சான்றோர் ஆசிகளுடனும்
உற்றார் மற்றோர் வாழத்துக்களுடனும்
நளைய உலகை வென்றிட
இன்றைய துவக்கத்தை
அருகிலிருந்து ஆரத்தழுவி
வாழத்த முடியாமல்
தூரமாய் இருந்து
உள்ளதால் இணைந்து
பிரார்த்தனைகளோடு வாழத்துகிறேன்

சென்று வா மகளே...!!
வென்று வா உலகை..!!! 😘

எழுதியவர் : கியாஸ் கலீல் (31-Mar-21, 5:01 pm)
சேர்த்தது : கியாஸ் கலீல்
பார்வை : 238

மேலே