ஷிண்டே பாண்டே
சிந்தன், பாண்டியன் இருவரும்
பொறியியல் பட்டதாரிகள். இருவருக்கும்
வட மாநிலம் ஒன்றில் உள்ள பெரிய
தனியார் நிறுவனத்தில் வேலை
கிடைக்கிறது. வேலையில் சேர்ந்தபின்
இருவரும் இரண்டு ஆண்டுகள் சென்றபின்
சொந்த கிராமத்துக்கு வருகின்றனர்.
அவர்களைப் பார்த்ததும் அவர்களது
நண்பன் நேகலேஷ்: "டேய் சிந்தன்,
பாண்டியன் வாங்கடா. நல்லா
இருக்கிறீங்களா? இந்தியெல்லாம் பேச,
எழுதப் பழகியிருப்பீங்க. வாழ்த்துகள்".
@@@@@@@
நன்றிடா நெகலேஷ். நீ இந்திப் பேரோட
பொறந்தவன். நான் 'சிந்தன்'ங்கிற தமிழ்ப்
பேரோட பொறந்து வடக்க போயி,
வேலைக்குச் சேர்ந்து 'ஷிண்டே'னு பேரை
மாத்திட்டேன்.
@@@@@@@
நான் நம்ம ஊர்ல இருக்கிற வரைக்கும்
'பாண்டியன். நல்ல தமிழ்ப் பேரோட
இருந்தேன். ஆனால் வடக்க போன உடனே
என் பேரை 'பாண்டே'ன்னு மாத்திட்டேன்.
எல்லாம் காலத்தின் கோலம்.
@@@@@@
நல்லதுடா ஷிண்டே, பாண்டே. பேருந்து,
மின்சார வசதி இல்லாத நம்ம மலை
கிராமத்தில் கூட யாரும் அவுங்க பெத்த
பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேருங்கள
வைக்கிறதில்லை. வடக்க வேலைக்குப்
போன சிந்தனும், பாண்டியனும் 'ஷிண்டே',
'பாண்டே' ஆனதில் ஆச்சரியப்பட ஒன்னும்
இல்லடா.