நான் சாகிறேன்
நான் சாகிறேன்.
04 / 05 / 2025
உன்பாடலை நான் பாடியே
உயிர்வாழ்கிறேன் உனக்காகவே
என்ஜீவனை தினம் தேடியே
உன்கண்களில் நான் காண்கிறேன்
எண்ணங்களில் உன்நினைவுகள்
வண்ணங்களாய் நிறம் கூட்டுதே
கண்ணாடியில் என்முகம் பார்க்கவே
கண்ணடித்து உன்முகம் காட்டுதே
பூங்காற்றாய் எனை அணைக்கையில்
பூகம்பமாய் நான் வெடிக்கிறேன்
கரைதேடியே வரும் அலையென
உனை தேடியே நான் அலைகிறேன்
விழிமூடியே நான் கிடக்கிறேன்
வழிமாறியே நான் தவிக்கிறேன்
நீபோனபின் என்வாழ்விலே
இருள் சூழ்ந்திட இருட்டானத்தே
விதி போட்டிடும் சதுரங்கத்தின்
புதிர் தேடியே நான் சாகிறேன்.
( "மேரே நாம் ஜோக்கர்" இந்தி
படத்தில் வரும் ' ஜீனா யஹான்
மர்னா யஹான் ' பாடலின்
பாதிப்பில் என் வரிகள்.)