கலைந்திடும் கூந்தல் கலைநிலாநீ தேயாய்

தொலைவில் தெரிகின்ற தேன்நிலா தேயும்
கலைந்திடும் கூந்தல் கலைநிலாநீ தேயாய்
சிலைவடிக்க வுன்னைக்கற் சிற்பி வரிசை
மலைகாத் திருக்குதே மான்

எழுதியவர் : கவின் சாரலன் (5-May-25, 11:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே